"படம் ரிலீஸ் ஆகுறப்போ MGR REVIEW கேக்குறது MK ஸ்டாலின் கிட்டயா?.. முதல் நாளிலேயே கோபாலபுரத்திற்கு பறக்கும் போன்!!.. முதல்வர் ஷேரிங்ஸ்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முதல் அமைச்சராக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருபவர் மு.க. ஸ்டாலின். திமுக கட்சியில் பல்வேறு பொறுப்பில் அங்கம் வகித்து சிறப்பாக செயல்பட்டு வந்த மு.க. ஸ்டாலின், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆகவும் தேர்வாகி இருந்தார்.

Images are subject to © copyright to their respective owners
தொடர்ந்து, மக்களுக்கான சிறப்பான ஆட்சியையும் அளித்து வரும் ஸ்டாலின், மக்கள் பிரச்சனைகளுக்காக நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்தும் தீர்வு கண்டு வருகிறார்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு பேசிய முதல்வர்
இந்த நிலையில், நமது Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்துள்ளார். இதனை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி இருந்தார். அரசியல் தவிர தனது பெர்ஷனல் பக்கங்கள் குறித்து நிறைய விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் வெளிப்படுத்தி இருந்தார். அது மட்டுமில்லாமல், அரசியலுக்கு அப்பாற்பட்டு நிறைய விஷயங்களையும் மிக ஜாலியாகவும் குறிப்பிட்டிருந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சிவாஜி ரசிகரா? எம்.ஜி.ஆர் ரசிகரா?
தற்போது அரசியலில் தீவிரமாக இயங்கி வந்தாலும் இளம் வயதில் சினிமாவை சுற்றி இயங்கியது பற்றியும், சீரியல்களில் நடித்தது பற்றியும் நிறைய விஷயங்களை மனம் திறந்து பேசி இருந்தார் முதல்வர். அதே போல ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் திரைப்படங்களை பர்ஸ்ட் டே, பர்ஸ்ட் ஷோ பார்த்து விடுவதாகவும் குறிப்பிட்டார் முதல்வர் MK ஸ்டாலின். அப்போது, "நீங்கள் யார் ரசிகர், சிவாஜி ரசிகரா?, இல்லை எம்.ஜி.ஆர் ரசிகரா?" என்ற கேள்வியை கோபிநாத் முன் வைக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners
"கட்சியின் அடிப்படையில் பார்த்தீங்கன்னா எம்ஜிஆர் ரசிகர். நடிப்பு என்ற விஷயத்துல பார்த்தீங்கன்னா சிவாஜி ரசிகர்" என ஸ்டாலின் பதில் தெரிவித்தார். மேலும் எம்ஜிஆர் நடிக்கிற படங்களை முதல் நாள் முதல் ஷோவில் பார்த்து விடுவதாக குறிப்பிட்ட ஸ்டாலின், பறக்கும் பாவை என்ற படத்தை முதல் நாள் பார்க்க சென்ற போது நடந்த சம்பவத்தை பற்றியும் விளக்கி இருந்தார்.
MGR என்கிட்ட ரிப்போர்ட் கேப்பாரு..
தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், "எம்ஜிஆர் படம் பொதுவா ஃபர்ஸ்ட் டே, ஃபர்ஸ்ட் ஷோ போயிருவேன். எம்ஜிஆரே படம் வந்துச்சுன்னா கோபாலபுரத்துக்கு ஃபோன் போட்டு என்னை பேசச் சொல்லி 'படம் பாத்தியா, எப்படி இருக்குன்னு?' என்கிட்ட ரிப்போர்ட். கேப்பாரு. நான் உடனே ஃபிராங்கா எல்லாத்தையும் சொல்லுவேன், அது சரி இல்ல, இது சரியில்ல. அது நல்லா இருந்துச்சு, இது ரொம்ப புடிச்சி இருந்தது. அப்படின்னு அவர்கிட்ட மனம் திறந்து பேசி இருக்கேன்" என முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
