அடிச்சு 'தூள்' கிளப்பிய நியூசிலாந்து... மார்டின் குப்தில், முன்ரோ தெறிக்க விட்டனர்... கடின இலக்குடன் களத்தில் இந்தியா...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | Jan 24, 2020 02:35 PM

இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 203 ரன்கள் குவித்துள்ளது.

purchased 204 runs to win the Indian team in New Zealand ... ..!

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 ஆக்லாந்து ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்தபோட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதை தொடர்ந்து முதலில் களமறிங்கிய நியூசிலாந்து அணியில் மார்டின் குப்தில், முன்ரோ தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அதிரடியாக விளையாடி இந்த ஜோடி இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சிதறவிட்டனர். நியூசிலாந்து 80 ரன்கள் எடுத்திருந்த போது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.

மார்டின் குப்தில் 19 பந்துகளுக்கு 30 ரன்கள் எடுத்திருந்த போது ஷிவம் துபே பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன்னும் அதிரடியை வெளிப்படுத்தி நியூசிலாந்து ரன் மலமலவென உயர்ந்தது. முன்ரோ, வில்லியம்ச்ன இருவரும் அரைசதம் அடித்து அவுட்டாகினர்.

நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் ... விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இந்திய அணி பந்துவீச்சாளர்களில் பும்ராவை தவிர மற்றவர் நியூசிலாந்து அணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்த தவறிவிட்டனர்.

இந்திய அணி ரன்கள் எடுத்தால் 204 வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.

Tags : #CRICKET #BATTING