'கெட்டிமேளம் சொன்ன புரோகிதர்'... 'அடுத்த நொடி மயங்கி விழுந்த கல்யாண பொண்ணு'... மணப்பெண்ணின் தங்கைக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | May 29, 2021 11:06 AM

வாழ்க்கையில் அடுத்த நொடி என்ன நடக்கப் போகிறது என்பதை யாரும் யூகிக்க முடியாது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.

Bride dies before wedding rituals, groom marries her sister

உத்தரப்பிரதேசத்தின் எடவாஹ் மாவட்டத்தில், எடவாஹ் மாவட்டம் சமஸ்பூர் பகுதியில் இளம்பெண் ஒருவருக்கும், இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அதன்படி திருமண நாள் வந்த நிலையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் துரிதமாக நடந்தது. முகூர்த்த நேரம் நெருங்கிய நிலையில், மணிமேடைக்கு மணமக்கள் இருவரும் அழைத்து வரப்பட்டார்கள்.

Bride dies before wedding rituals, groom marries her sister

பின்னர் திருமண சடங்குகள் அனைத்தும் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தாலி கட்டும் நேரம் நெருங்கிய நிலையில் புரோகிதர் தாலியை மணமகன் கையில் கொடுத்த சில நொடிகளில் மணமகள் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் திருமணத்திற்கு வந்த அனைவரும் பதறிப் போன நிலையில், உடனடியாக மருத்துவர் வரவைக்கப்பட்டார்.

மருத்துவர் வந்து மணப்பெண்ணைச் சோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டார் எனத் தெரிவித்தார். அவர் மாரடைப்பு காரணமாக இறந்ததாக மருத்துவர் தெரிவித்தார். இதனால் மொத்த திருமண மண்டபமும் சோகத்தில் மூழ்கியது. ஒருகட்டத்தில் மனதைத் தேற்றிக் கொண்டு மணமகளின் தங்கைக்குத் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர்.

Bride dies before wedding rituals, groom marries her sister

இதனை தொடர்ந்து மணமகளின் உடலை ஒரு அறையில் வைத்து விட்டு பெரும் துக்கத்துடன் திருமணம் நடைபெற்றது. இதற்கிடையே இந்த செய்தி இணையத்தில் வைரலான நிலையில் பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

மணமகள் மயங்கி விழுந்ததும் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல் மருத்துவர் வரும் வரை அங்கேயே வைத்திருந்தது மிகப்பெரிய தவறு எனக் கருத்துகளைப் பதிவிட்டனர். அதேபோன்று அவசர அவசரமாக மணப்பெண்ணின் தங்கையைத் திருமணம் செய்து வைத்ததும் தவறு எனவும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

Tags : #BRIDE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bride dies before wedding rituals, groom marries her sister | India News.