பல சுவாரஸ்ய திருப்பங்களுக்கு பிறகு, வேலூர் மக்களவைத் தேர்தல் முடிவு... வெற்றி வேட்பாளர் யார்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Aug 09, 2019 02:40 PM
திமுகவா? அதிமுகவா? பல சுவாரஸ்ய திருப்பங்களுக்கு பிறகு, வேலூர் மக்களவைத் தேர்தல் முடிவு... வெற்றி வேட்பாளர் யார்?
கடந்த 5-ஆம் தேதி திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் போட்டியிட்ட வேலூர் மக்களவைத் தொகுதித் தேர்தலுக்கு பிறகு வாக்கு எந்திரங்கள் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டன.
இதனையடுத்து இந்தத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகளை எண்ணும்போதும், அதன் பிறகு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விடவும், ஏ.சி.சண்முகம் 14683 வாக்குகள் முன்னிலை பெற்று வந்தார்.
ஆனால் அந்தர் பல்டி 12, 588 வாக்குகளே எண்ணப்பட வேண்டியிருந்த நிலையில், கதிர் ஆனந்த் 4 லட்சத்து 78 ஆயிரத்து 855 வாக்குகள் பெற்று ஏ.சி.சண்முகத்தை பின்னுக்குத் தள்ளி 8,460 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வந்தார். இறுதியில் 4 லட்சத்து 83 ஆயிரத்து 459 வாக்குகள் பெற்று திமுகவின் கதிர் ஆனந்த் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக-வின் ஏ.சி.சண்முகத்தை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதே தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 26 ஆயிரத்து 880 பெற்று வெற்றியடைந்தார்.
இதன் மூலம் தமிழகத்தில் திமுக எம்.பிக்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.