‘யாருக்கு எந்த துறை?.. புதிய அமைச்சர்களின் இலாகாக்கள் முழு விவரம்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Arunachalam | May 31, 2019 03:41 PM
17 வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் இந்திய பிரதமராக மோடி நேற்று (30/05/2019) பதவியேற்றுள்ள நிலையில் அவருடன் பதவியேற்ற மத்திய அமைச்சர்களுக்கு இன்று (31/05/2019) இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.
17 வது மக்களவைத் தேர்தலில் பாஜக 350 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி இலாகாகளை ஒதுக்கியுள்ளார்.
இந்நிலையில், பதவியேற்றுள்ள 24 கேபினட் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மற்றும் இலாகா பட்டியல் பின்வருமாறு
பெயர் இலாகா (துறை)
நரேந்திர மோடி பிரதமர்
ராஜ்நாத் சிங் பாதுகாப்புதுறை
அமித்ஷா உள்துறை
நிதின் கட்கரி சாலை போக்குவரத்து துறை
சதானந்த கவுடா உரம் மற்றும் ரசாயணத்துறை
நிர்மலா சீதாராமன் நிதித்துறை
ராம்விலாஸ் பஸ்வான் நுகர்வோர்,உணவுத்துறை
நரேந்திர சிங் தோமர் வேளாண் துறை
ரவிசங்கர் பிரசாத் சட்டத்துறை
ஹர்சிம்ரத் கவுர் பாதல் உணவு பதப்படுத்துதல் துறை
தாவர் சந்த் கெலாட் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை
ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை
ரமேஷ் போக்ரியால் மனிதவள மேம்பாட்டுத்துறை
அர்ஜூன் முண்டா பழங்குடியின நலத்துறை
ஸ்மிர்தி இராணி ஜவுளித்துறை
ஹர்ஷ் வர்தன் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்
பிரகாஷ் ஜவடேகர் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை
பியூஸ் கோயல் ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை
தர்மேந்திர பிரதான் பெட்ரோலியத்துறை
முக்தர் அப்பாஸ் நக்வி சிறுபான்மையினர் நலத்துறை
மகேந்திரநாத் பாண்டே திறன் மேம்பாடு, சுயதொழில்
கிரிராஜ் சிங் விலங்குகள் மற்றும் பால்வளத்துறை
கிரண் ரிஜிஜூ விளையாட்டுத்துறை
பிரகால்ட் ஜோஷி நாடாளுமன்ற விவகாரத்துறை
அரவிந்த் சாவந்த் பொதுத்துறை
இதில் 24 கேபினட் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.