'இஸ்லாமிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்பு'... தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இஸ்லாமிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுக் காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர், தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் விவாதிக்கத் தயார் எனச் சவால் விடுத்தார். தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடந்து வருகிறது. இதனால், சாதி, மத மோதல்கள் இல்லை.
பிரச்சினைகள் வந்தால் இரும்புக்கரம் கொண்டு அடைக்கப்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்ட முதல்வர், அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழுவின் பரிந்துரையை ஏற்று 14 ஆயிரத்து 400 கோடி ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் பாதுகாப்பாக இருப்பது அதிமுக அரசு தான் எனக் குறிப்பிட்ட முதல்வர், காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார். அதோடு உலமாக்களுக்கு நிலம் வாங்கி வீடு கட்டி தரப்படும் எனவும் முதல்வர் குறிப்பிட்டார்.
ஹஜ் யாத்திரைக்கு மானியம் ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஹஜ் யாத்திரைகளுக்குத் தங்கிச் செல்ல சென்னையில் ரூ.15 கோடி செலவில் ஹஜ் இல்லம் கட்டப்பட்டுள்ளது. நாகூர் தர்காவுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நோன்புக் கஞ்சிக்கு இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. உலமாக்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என, சிறுபான்மை மக்களுக்கு அரசு செய்த நலத்திட்டங்களை முதல்வர் பட்டியலிட்டுப் பேசினார்.
சிறுபான்மையினர் நலன் #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை pic.twitter.com/9zxG9J6lUX
— AIADMK (@AIADMKOfficial) April 3, 2021

மற்ற செய்திகள்
