'அந்த கடவுளே எங்க பக்கம் தான்...' 50 வருசத்துக்கு அப்புறம், இப்போ தான் 'அது' நடந்துருக்கு...! - பரப்புரையில் தமிழக முதல்வர் பேச்சு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தியாகராயநகர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.

அப்போது, தி.மு.க தலைவர் ஸ்டாலின் போகும் இடமெல்லாம் என்னைப்பற்றித்தான் பேசி வருகிறார். எடப்பாடி பழனிசாமி பல்லாண்டு வாழவேண்டும் என்று கூறிவருகிறார்.
இவர் சொல்லியா நான் வாழ வேண்டும், இறைவன் அருளால் நான் வாழ்கின்றேன். நாங்கள் தெய்வ பக்தி உடையவர்கள். உங்களைப் போல, கோவிலுக்கு சென்றால் விபூதியை அழிப்பவர்கள் அல்ல. தேவர் திருமகனாரின் நினைவிடத்திற்குச் சென்ற போது, அங்கு வழங்கிய திருநீரை கீழே கொட்டியவர் ஸ்டாலின். ஆனால், நாங்கள் உண்மையான தெய்வ பக்தி கொண்டவர்கள்.
தி.மு.க.வினர் மக்களுக்காக அதிமுக அரசு எதுவுமே செய்யவில்லை என்று கூறி வருகின்றனர். அவர்கள் தி.நகருக்கு வந்து பார்க்கட்டும். சிங்கப்பூர் மாதிரி அருமையாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகர் பாண்டிபஜார் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து தி.நகர் ரயில் நிலையம் வரை ரூ.20 கோடி மதிப்பீட்டில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.
அனைத்து மருத்துவமனைகளிலும் உயர்தர மருத்துவ கருவிகளை வழங்கி இருக்கிறோம். இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு. பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை எடுத்தோம். அந்த பரிசோதனைக்கு செலவு அதிகம். எங்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் உயிர் தான் முக்கியம்,
தமிழ்நாடு முழுவதும் 2.5 இலட்சம் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதனால், உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதால் குற்றங்கள் பெருமளவில் குறைந்து,
சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்திலும் நீர் நிரம்பியுள்ளது. எங்கள் ஆட்சி சிறப்பான ஆட்சி என்பதற்கு இயற்கையே சாட்சி. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அணைகளிலும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் நீர் நிரம்பியுள்ளது. எனவே , இறைவன், இயற்கை மற்றும் மக்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர் என்று முதல்வர் பேசினார்.

மற்ற செய்திகள்
