IKK Others
MKS Others

கிடைத்தது 'கருப்பு' பெட்டி...! கடைசி நேரத்துல என்ன பேசியிருப்பாங்க...? - தெரியப்போகும் உண்மைத் தகவல்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Dec 09, 2021 12:08 PM

ராணுவ உயரதிகாரிகள் பயணம் செய்த விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த கருப்பு பெட்டி கண்டறியப்பட்டுள்ளது

Discovery of the black box of a mi-17v5 helicopter

பொதுவாக எந்த ஒரு விமானமும் விபத்தில் சிக்கினால் முதலில் தேடப்படுவது விமானத்தில் இருக்கும் அந்த கருப்பு பெட்டி தான். அதோடு தற்போது நடந்துள்ள விமான விபத்து இந்தியாவையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்திய ராணுவத்தின் உச்சபட்ச தலைவரான முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிக்கா, ராவத்தின் தனி பாதுகாவலர் சாய் தேஜ் ஆகியோர் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

14 பேர் பயணம் செய்த இந்த விமானத்தில் விமானப்படை குரூப் கேப்டன் வருண்குமார் மட்டுமே 80% தீக்காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். விமான விபத்துக்கு பின் விபத்து நிகழ்ந்த குன்னூர் பகுதி முழுவதையும் ராணுவம் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ளது.

அதோடு விமானப்படை அதிகாரிகள், நிபுணர்கள் ஹெலிகாப்டரில் இருந்த கருப்பு பெட்டியை தீவிரமாக தேடிய நிலையில் தற்போது அந்த கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 2 கருப்பு பெட்டிகளைக் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பெட்டிகளை பெங்களூர் அல்லது டெல்லி கொண்டுசென்று ஆய்வுசெய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கருப்பு பெட்டியில் இருக்கும் இரு பகுதிகளில் ஒன்று பைலட்கள் பேசியதை பதிவு செய்யும். மற்றொன்று விமானம் எவ்வளவு உயரத்தில், எவ்வளவு வேகத்தில் பறந்தது போன்ற தரவுகளை சேமிக்கும் பகுதி.

இந்த பெட்டியை வைத்து தான் விபத்து நடக்க சில நிமிடங்களுக்கு முன் ஹெலிகாப்டரில் என்ன நடந்தது, எவ்வளவு அடி உயரத்தில் பறந்தது, பைலட் என்ன பேசினார் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைக் கண்டுபிடிக்க முடியும்.

மேலும், கடைசி 2 மணி நேரத்திற்கு பைலட்களுக்கும் தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையே நடக்கும் உரையாடல்களை பதிவு செய்து வைத்திருக்கும். தண்ணீரில் விழுந்தாலும் தீயில் எரிந்தாலும் இதில் உள்ள தரவுகள் பாதுகாப்பாக இருக்கும்.

இவை புவி ஈர்ப்பு விசையை விட 3400 மடங்கு விசையையும் 1,000 டிகிரி செல்சியஸை விட அதிக வெப்பநிலையையும் தாங்கக் கூடியது. இது ஆரஞ்சு நிறத்தில் இருந்தாலும் பொதுவாக இது கருப்பு பெட்டி என்றே அழைக்கப்படுகிறது.

Tags : #BIPIN RAWAT HELICOPTER ACCIDENT #BIPIN RAWAT #MI-17V5 #HELICOPTER #BLACK BOX

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Discovery of the black box of a mi-17v5 helicopter | Tamil Nadu News.