‘ரொம்ப லேட் ஆகுது’!.. வேற வழியில்ல வாங்கிற வேண்டியதுதான்.. அன்னாந்து பார்க்க வச்ச விவசாயி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபால் விற்பனைக்காக விவசாயி ஒருவர் ஹெலிகாப்டர் வாங்கி சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் போரி. இவர் அப்பகுதியில் ஏராளமான கறவை மாடுகளை வைத்து பால் வர்த்தகம் செய்து வருகிறார். இந்த நிலையில் பால் விற்பனைக்காக 30 கோடி ரூபாயில் ஹெலிகாப்டர் வாங்கி ஜனார்த்தனன் அனைவரையும் அசர வைத்துள்ளார்.
இதுகுறித்து தெரிவித்த ஜனார்த்தனன் போரி, ‘பால் விற்பனைக்காக குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடிக்கடி செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் காலதாமத்தை தவிர்க்க ஹெலிகாப்டர் வாங்கியுள்ளேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக சுமார் இரண்டரை ஏக்கர் அளவில் ஹெலிபேட், பைலட் அறை, உள்ளிட்டவற்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக ஜனார்த்தனன் தெரிவித்துள்ளார். பால் விற்பனை மட்டுமல்லாமல், விவசாயமும் செய்து வரும் ஜனார்த்தனன், பல சேமிப்பு கிடங்குகளையும் (Warehouse) வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
