பிபின் ராவத் விபத்தில் சிக்கிய MI-17-V5 ஹெலிகாப்டரில் உள்ள பிரத்யேக வசதிகள்.. முழு விவரம்
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்கோவை: முப்படை தளபதி பிபின் ராவத் பயணித்து விபத்தில் சிக்கிய Mi-17V5 ஹெலிகாப்டர் என்பது ரஷ்யாவில் இராணுவ போக்குவத்திற்காக தயாரிக்கப்பட்ட Mi-8 ரக ஹெலிகாப்டர்கள் ஆகும். இதன் முக்கிய அம்சங்களை இப்போது பார்ப்போம்.

இந்த ஹெலிகாப்டர்கள் ராணுவ வீரர்கள் பயணிக்கவும், ஆயுதப் போக்குவரத்து, தீயணைப்பின் போது, பெரு வெள்ளத்தின் போது மற்றும் அவசரகால ரோந்துக்காகவும், தேடல் மற்றும் மீட்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. mi-17-v5 ஹெலிகாப்டர் உலகின் மிகவும் மேம்பட்ட இராணுவ போக்குவரத்து ஹெலிகாப்டர்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
Mi-8 ரக ஹெலிகாப்டர்கள் முதல்முதலாக அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு 1975 ஆகும். ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டரின் சமீபத்திய வெர்சனின் விலை ரூ.145 கோடி. இந்த ஹெலிகாப்டர் மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்.
ரஷ்யாவின் Rosoboronexport 2008 இல் இந்திய அரசாங்கத்துடன் 80 Mi-17 V5 ஹெலிகாப்டர்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இது 2013 இல் நிறைவடைந்தது. இந்திய விமானப்படைக்கு 71 Mi-17V5 ஹெலிகாப்டர்களை வழங்குவதற்கான புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 2018ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 151 Mi-17 ரக ஹெலிகாப்டர்கள் உள்ளன.
- Mi-17V5 மீடியம்-லிஃப்டர் எந்த பாதகமான சூழ்நிலையிலும், வெப்பமண்டல மற்றும் கடல்சார் காலநிலைகளிலும் மற்றும் பாலைவன நிலைகளிலும் கூட பறக்க முடியும்.
- விவிஐபிகள் பயன்படுத்துவதற்காக பிரத்யேகமான வசதிகள் உள்ளன. அதாவது ஹெலிகாப்டரில் ஸ்டார்போர்டு ஸ்லைடிங் கதவு, பாராசூட் உபகரணங்கள், சர்ச்லைட் மற்றும் அவசர மிதவை அமைப்பு ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
- Mi-17V5 ஹெலிகாப்டரின் அதிகபட்ச டேக்-ஆஃப் எடை 13,000 கிலோ ஆகும். 36 ராணுவ வீரர்கள் இதில் பயணிக்கக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய ஹெலிகாப்டர் ஆகும். இதில் இரவு பார்வை உபகரணங்கள், உள் வானிலை ரேடார் மற்றும் ஒரு தன்னியக்க பைலட் அமைப்பு ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
ஹெலிகாப்டரின் முக்கிய பாகங்கள் கவச தகடுகளால் பாதுகாக்கப்படுகின்றன. எரிபொருள் டேங்குகள் வெடிக்காமல் பாதுகாக்க நுரை பாலியூரிதீன் நிரப்பப்பட்டிருக்கும். - Mi-17V5 ஹெலிகாப்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ, மற்றும் நிலையான வரம்பு 580 கிமீ. இது அதிகபட்சமாக 6,000 மீ உயரத்தில் பறக்கக் கூடியது.
- இது ஒரு "மிகவும் நம்பகமான, பாதுகாப்பான, நிலையான மற்றும் பெரிய" ஹெலிகாப்டராகும், இது தான் குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் உட்பட விஐபிகளை அழைத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
