IKK Others
MKS Others

பிபின் ராவத் உள்பட '13 பேரை' பலி கொண்ட விபத்து 'நடந்தது' எப்படி? கருப்புப் பெட்டியில் மறைந்திருக்கும் உண்மை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Dec 09, 2021 08:13 AM

ஊட்டி : குன்னூரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்பட  ராணுவத்தினர் 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். வெடித்து சிதறிய ஹெலிகாப்டரில் இருந்த கருப்பு பெட்டியை தேடி கண்டுபிடிக்க கடும் முயற்சி நடந்து வருகிறது.

Try to find black box that was in the mi-17v5 helicopter

நீலகிரி மாவட்டம், குன்னுார், வெலிங்கடனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு புதன்கிழமை(நேற்று) நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் புறப்பட்டனர்.

விமானம் தரையிறங்க ஐந்து நிமிடம் இருக்கும் போது, அதாவது  குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி  பள்ளத்தாக்குக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது,  கடும் மேகமூட்டம் காணப்பட்டது. இதனால், ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விழுந்து  விபத்து ஏற்பட்டது. இதில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறி பற்றி எரிந்தது.

இதில் பயணம் செய்த  பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். விமானத்தின் விமானி வருண் மட்டுமே படுகாயங்களுடன்  சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்நிலையில்  விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும் போது, மரத்தில் மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் தாழ்வாக பறந்தது.  சிறிது நேரத்தில் மரத்தில் மோதி எரிந்த நிலையில் விழுந்தது என்று கூறினார்கள்.

உலகில் இருக்கும் அதிநவீன ஹெலிகாப்டர்களில்  Mi-17V5வும் ஒன்று. இது  தீயணைப்புப்பணி, பாதுகாப்புப் பணி, கண்காணிப்பு, மீட்புப்பணி ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது.  கடுமையான மழை பெய்யும் பகுதி, கடற்பகுதி, பாலைவனம் ஆகியவற்றிலும் இந்த ரக ஹெலிகாப்டர்கள் சிறப்பாக பறக்கும் தன்மை கொண்டவை. விவிஐபிகள் பயன்படுத்துவதற்காக பிரத்யேகமான வசதிகள் உள்ளன. அதாவது ஹெலிகாப்டரில் ஸ்டார்போர்டு ஸ்லைடிங் கதவு, பாராசூட் உபகரணங்கள், சர்ச்லைட் மற்றும் அவசர மிதவை அமைப்பு ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

எனவே ஹெலிகாப்டர் எப்படி விபத்துக்குள்ளானது,  கடைசி நேரத்தில் விமானி பேசியது என்ன? ஹெலிகாப்டரில் என்ன பிரச்சனை ஏற்பட்டது என்பதை அறிய கருப்பு பெட்டியை கண்டுபிடிக்க வேண்டும். விமானத்தில் உள்ளது போன்று ஹெலிகாப்டரிலும் கருப்பு பெட்டி உள்ளது.

எனவே கருப்பு பெட்டியை கண்டுபிடித்தால் தான் உண்மை என்ன என்பது தெரியவரும். அதாவது விபத்து நடப்பதற்கு முன்பு என்ன நடந்தது என்பது தெரியவரும். இந்நிலையில் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து விமானப்படையினர், கருப்பு பெட்டியை தேடும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளனர். கருப்பு பெட்டியை கண்டுபிடித்தால் விபத்திற்கான காரணம் நிச்சயம் தெரியவரும்.

Tags : #BLACK BOX #MI-17V5 #HELICOPTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Try to find black box that was in the mi-17v5 helicopter | Tamil Nadu News.