முப்படை தலைமை தளபதி ‘பிபின் ராவத்’ மரணம்.. ராணுவத் தளத்தின் வருகை பதிவேட்டியில் ‘முதல்வர்’ எழுதிய உருக்கமான இரங்கல் பதிவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

குன்னூர் மலைப்பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் (Bipin Rawat) அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு இன்று (08.12.2021) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) சென்றார். அங்கு விபத்து நடந்த விவரங்கள் குறித்து ராணுவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டுள்ள உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த வருகைப் பதிவேட்டில் தனது இரங்கல் குறிப்பை பதிவு செய்தார்.
அதில், ‘தாய் திருநாட்டின் வீரத்திருமகன் விபத்தில் உயிர் இழந்ததிற்கு நாடு பெறுகிற துன்பத்தில் நானும் இணைந்து எனது வீரவணக்கத்தை செலுத்துகிறேன்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
