குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர் இவர் தான்! என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்று குன்னூரில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 14 பேரில் 13 பேர் உயிர் இழந்தனர். முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, ராணுவ அதிகாரிகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டரின் விமானி வருண் சிங் மட்டும் உயிர் பிழைத்து தற்போது குன்னூர் வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வருணை மீட்புப் படையினர் மீட்கும் போது 80 சதவிகித தீக்காயங்கள் உடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களின் உடல்கள் நாளை டெல்லி கொண்டு செல்லப்படுகின்றன. டெல்லியில் நாளை இறுதி மரியாதை நடைபெற உள்ளது. "நாட்டுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்த பிபின் ராவத் வாழ்க்கை சிறப்புக்குரியது" என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் கோயம்புத்தூர் - சூலூர் பகுதிகளுக்கு இடையில் உள்ள கூனூரில் இந்திய விமானப் படையின் ஐஏஎப் எம்ஐ-17வி5 ராணுவ ஹெலிகாப்ட்டர் எதிர்பாராத விதமாக இந்த விபத்துக்கு உள்ளானது.

மற்ற செய்திகள்
