IKK Others
MKS Others

நாட்டையே 'அதிர' வைத்த குன்னூர் 'ஹெலிகாப்டர்' விபத்து...! - எத்தனை பேர் பலி...?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Dec 08, 2021 02:27 PM

நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து 4 பேர் பலியாகி உள்ளதாக தகவல்.

Army helicopter crashes on Coonoor Vampire Hill, killing 4

மேலும் 3 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குன்னூரில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத் பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது நிலைமை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

குன்னூர் அருகே, கோவையில் இருந்து வந்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. அதில், ராணுவ அதிகாரி மற்றும் நான்கு வீரர்கள் உயிரிழந்தனர். (உயிரிழந்தவர்கள் பெயர் மற்றும் விவரம் இன்னும் வெளிவரவில்லை.)

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெல்லிங்டன் ராணுவ அலுவலர்களுக்கான பயிற்சி கல்லூரி மற்றும் மையம் உள்ளது. இங்கு நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பங்கேற்பதாக இருந்தது. இதனை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக, கோவையில் உள்ள ராணுவ மையததில் இருந்து ஹெலிகாப்டரில் வெல்லிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு ராணுவ அதிகாரி மற்றும் 3 வீரர்கள் வந்தனர்.

பிற்பகல் 12:30 மணியளவில், குன்னூர், காட்டேரி நஞ்சப்பா சத்திரம் பகுதியில், ஹெலிகாப்டர் கீழே விழுந்தது. இதில் ராணுவ அதிகாரி மற்றும் 2 வீரர்கள் உயிரிழந்தனர். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். இது தொடர்பாக போலீஸ், ராணுவம் விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Tags : #HELICOPTER #COONOOR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Army helicopter crashes on Coonoor Vampire Hill, killing 4 | Tamil Nadu News.