"ஒரு ஆளு நெனச்சு இருந்தா கூட காப்பாத்தியிருக்கலாம்"... நமக்கு எதுக்கு 'வம்பு'ன்னு ஒதுங்கிய 'பொது' மக்கள்,,.. மறுநொடியே நடந்த மனதை ரணமாக்கும் 'கோரம்'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகேயுள்ள கேசிபட்டி என்னும் பகுதியில் அமைந்துள்ள டீ கடை ஒன்றிற்கு வெளியே பெண் ஒருவர் தனது உடலின் மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ள முற்பட்டுள்ளார்.
அப்போது, அந்த டீ கடையில் இருந்தவர்கள், சாலை அருகே நடந்து கொண்டிருந்தவர்கள் உட்பட அங்கு இருந்த யாரும் பெண்ணைக் கண்டு கொள்ளவில்லை. உடம்பில் பெட்ரோல் ஊற்றிக் கொண்ட அந்த பெண் மறுகணமே, தீப்பெட்டியை எடுத்து உரசி உடலில் தீ வைத்துக் கொண்டார். மறுநொடியே அந்த பெண் உடல் முழுவதும் தீ பரவிய நிலையில், 'என்னை காப்பாற்றுங்கள்' என வேதனையில் கூச்சலிட்டுள்ளார்.
தீயை அணைக்க யாரும் முயற்சி செய்யாமல் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தனர். சாலையில் நடந்து சென்ற சிலர் கூட இதனை ஒரு பொருட்டாக கருதவில்லை. ஒரே ஒருவர் மட்டும் துணி ஒன்றை கொண்டு தீயை அணைக்க முயற்சி செய்தார். இந்த முழு சம்பவத்தையும் தனது தொலைபேசியில் வீடியோ எடுத்த நபர் கூட பெண்ணின் உயிரை காக்க முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. அந்த பெண் சம்பவ இடத்திலேயே தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிகிறது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், தனது கண் முன் உயிருக்கு போராடும் பெண்ணை காப்பாற்றக் கூட முயற்சிக்காமல் பொது மக்கள் கடந்து சென்ற நிலையில், மக்களின் இந்த செயல் மனிதநேயத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
முன்னதாக, அந்த பெண் தனது கணவரை பிரிந்து 6 வயது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். அப்போது ஓட்டுனர் ஒருவரை அவர் காதலித்து அவருடன் வாழ முடிவு செய்த நிலையில் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில், அந்த ஓட்டுனருக்கு வீட்டில் வேறொரு பெண் பார்த்த நிலையில், அந்த பெண்ணை ஓட்டுனர் திருமணம் செய்துள்ளார்.
இதனால் மனவேதனையில் இருந்த பெண், ஓட்டுனரின் வீட்டிற்குச் சென்று நியாயம் கேட்க முயன்ற நிலையில், அவர்கள் பெண்ணை அடித்து அனுப்பியுள்ளனர். இதனால், மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.