VIDEO : 'மழை'யால் சேதமடைந்த குடிசை வீடு 'நடுவே'... கதறி அழும் 'சிறுமி'... இனிமே எல்லாம் 'முடிஞ்சுது'ன்னு நினைக்கிறப்போ.,, தேடி வந்த 'சர்ப்ரைஸ்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாசட்டீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம், கோமலா என்னும் கிராமத்தை சேர்ந்த பழங்குடி சிறுமி அஞ்சலி. அந்த பகுதியில், அதிகம் மாவோயிஸ்ட்கள் பாதிப்புள்ள நிலையிலும், அந்த சிறுமி படிப்பின் மீதான ஆர்வத்தினால் பள்ளிக்கு சென்று படித்து வந்துள்ளார். நர்ஸ் ஆவதே சிறுமி அஞ்சலியின் லட்சியமாக இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக பிஜப்பூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வந்துள்ளது. இதன் காரணமாக, அஞ்சலி மற்றும் அவரது பெற்றோர்கள் உட்பட அந்த கிராமத்தை சேர்ந்த பலர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மழை ஓய்ந்த பிறகு வீட்டிற்கு வந்த அஞ்சலிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீடு உடைந்து போய் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்து கிடந்தது. அதைக் கண்டு கூட கலங்காத சிறுமிக்கு அவரது புத்தகங்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கிக் கிடந்தது கண்டு கண்ணீர் பெருக்கெடுத்தது. கதறி அழுது கொண்டே புத்தகங்களை மழை நீரில் இருந்து சிறுமி எடுக்கும் துயர சம்பவத்தை பத்திரிகையாளர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட, பலதரப்பட்ட மக்கள் அந்த சிறுமிக்கு உதவி செய்ய முன் வந்தனர்.
மேலும், சட்டீஸ்கர் மாநில முதல்வர் புபேஷ் பகல், அந்த சிறுமிக்கு உடனடியாக உதவும்படி பிஜப்பூர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். அடுத்த சில மணி நேரங்களில் சிறுமியின் வீட்டை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் சுமார் 1 லட்சம் வரை வழங்கப்பட்டது. அதே போல, நர்சிங் கல்லூரியில் சேர்ந்து அஞ்சலி படிக்கவும், மாவட்ட நிர்வாகம் உதவி செய்யும் என உறுதியளித்தது.
அது மட்டுமில்லாமல், ஊரடங்கு காலங்களில், இந்திய மக்கள் பலருக்கு தன்னாலான உதவியை செய்து வரும் நடிகர் சோனு சூத், சிறுமி அஞ்சலியின் இந்த விடீயோவையும் பகிர்ந்து, 'கண்ணீரைத் துடையுங்கள் சகோதரி. புத்தகமும், உங்களது வீடும் எல்லா புதியதாக கிடைக்கும்' என தெரிவித்துள்ளார்.
आंसू पोंछ ले बहन...
किताबें भी नयीं होंगी..
घर भी नया होगा। https://t.co/crLh48yCLr
— sonu sood (@SonuSood) August 19, 2020