சாப்பிடுங்க மா..! என்ன உங்க மகளா நினைச்சுக்கோங்க.. வயசானவங்கள மட்டும் டார்கெட் பண்ணி நடந்த மோசடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jan 12, 2022 09:29 PM

திண்டுக்கல்: முதியவர்களிடம் அன்பாகவும் பாசமாகவும் பேசி மயக்க மருந்து கொடுத்து நகைகள் பறித்து வந்த கள்ளக்காதல் தம்பதிகள் போலீசில் சிக்கியுள்ளனர்.

Dindigul couple snatched jewelry from the old peoples

கொரோனா காலத்திற்கு பிறகு மக்களிடையே பொருளாதார ரீதியாக அதிக அளவிற்கு பின்னடவை சந்தித்துள்ளனர். அனைத்து மட்டங்களிலும் தொழில் ரீதியான வீழ்ச்சி நடந்துள்ளது. வேலை இழத்தல். நிறுவனங்களில் ஆள் குறைப்பு உள்ளிட்ட பல நெருக்கடிகளை சந்தித்ததினால் தங்கள் கனவுகளை இழந்துள்ளனர்.

Dindigul couple snatched jewelry from the old peoples

மோசடி சம்பவங்கள் அதிகரிப்பு:

இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் ஏரளாமான குற்ற செயல்கள் அதிகரித்துள்ளதும் புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது. நிறைய திருட்டு, வழிப்பறி, ஆன்லைன் மோசடி, விபச்சாரம், என குற்ற செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒருவரை எப்படி ஏமாற்றி பணம் பறிப்பது என புதிய திட்டங்கள் தீட்டி ஏமாற்றி வருகின்றனர். ஏடிஎம் மையங்களிலும் கொள்ளை சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது.

Dindigul couple snatched jewelry from the old peoples

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக வயதானவர்களை குறிவைத்து பல கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தது. அதோடு, பல திருட்டு சம்பவங்கள் ஒரே மாதிரியாக மயக்கமருந்து கொடுக்கப்பட்டு நகைகளை திருடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

Dindigul couple snatched jewelry from the old peoples

மயக்க மருந்து கலந்த தின்பண்டங்கள்:

அதோடு, வடமதுரை, குஜிலியம்பாறை போன்ற பகுதிகளில் தனிமையில் இருக்கும் மூதாட்டிகளிடம் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வந்தது.திருட்டு சம்பவத்தில் ஈடுப்படும் நபர்கள் முதலில் முதியவர்களிடம் லாவகமாக பேசி, மயக்க மருந்து கலக்கப்பட்ட தின்பண்டங்களை கொடுத்து சாப்பிட வைத்துள்ளனர்.

நிறைய மூதாட்டிகளிடம் கைவரிசை:

மயக்கமடையச் செய்தபின், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை திருடிச் செல்வதை இந்த ஜோடி வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட மூதாட்டிகளிடம் கைவரிசை காட்டியுள்ளது.

இந்நிலையில், வேடசந்தூர் அரசு மருத்துவமனை எதிரே இந்த ஜோடி, மூதாட்டி ஒருவரிடம் பேசி அவரை பைக்கில் அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து, திருட்டில் ஈடுப்பட்ட கணேசன் மற்றும் சுமதியை போலீசார் கைது செய்தனர். மேலும், விசாரணையில் இவர்கள் இருவரும் கள்ளக்காதல் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

Tags : #DINDIGUL #JEWELRY #SNATCHED #நகைகள் #தம்பதிகள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dindigul couple snatched jewelry from the old peoples | Tamil Nadu News.