டாக்டர் செய்த ஒற்றை தவறு.. 15 வருசம் கண்பார்வை இல்லாமல் தவித்த பெண்! கடைசியில் தெரியவந்த உண்மை!
முகப்பு > செய்திகள் > உலகம்எளிதில் மேற்கொள்ளக்கூடிய அறுவை சிகிச்சையினால் கண்பார்வை கிடைக்கும் வாய்ப்பிருந்தும் டாக்டர் செய்த பரிசோதனைக் குளறுபடியினால் தேவையில்லாமல் 15 ஆண்டுகள் கண்பார்வையை இழந்து தவித்திருந்திருக்கிறார் அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்த கோனி பார்கி.
இவருக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு பார்வைத் திறன் குறைய ஆரம்பித்துள்ளது. உடனடியாக மருத்துவரை அணுகிய கோனிக்கு அதிர்ச்சி பதிலை அளித்தார் மருத்துவர். அவரது விழித்திரைகள் பிளவுபட்டிருக்கலாம் அல்லது அவருக்கு கிளாக்கோமா எனும் கண் நோய் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்த மருத்துவர், இதனை சரிசெய்யவே முடியாது எனக் கூறியிருக்கிறார்.
அதன்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவரது பார்வை மங்கத் துவங்கியுள்ளது. டாக்டரை சந்தித்த அடுத்த ஆறு மாதங்களுக்குள் 85 சதவீத பார்வைத் திறனை கோனி இழந்ததால் உளவியல் ரீதியாக பல சிக்கல்களை அவர் சந்தித்துள்ளார்.
"நான் மாடிப்படிகளில் ஏறும்போதும், இறங்கும்போதும் அவ்வளவு ஏன் ? வெட்டவெளியில் நடக்கும்போது கூட தடுமாறி கீழே விழுந்தேன். என்னால் இனி பார்க்கவே முடியாது என்னும் வருத்தம் என்னை மேலும் பலவீனமாக்கியது" என்றார் கோனி.
பொங்கல் தொகுப்பில் பல்லி என புகார் சொன்ன தந்தை.. தற்கொலை செய்த மகன்... என்ன நடந்தது ?
2004 வாக்கில் டென்வருக்கு குடிபெயர்ந்த கோனி பார்வைக்குறைபாடு உடையோருக்கான பள்ளியில் சேர்ந்து படித்திருக்கிறார். அதன் பலனாக ஐஸ் ஸ்கேட்டிங், கேம்பிங் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் அளவிற்கு திறமைகளை வளர்த்துக்கொண்டுள்ளார்.
"பார்வை பறிபோவதற்கு முன்னர் நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படியே வாழ ஆசைப்பட்டேன், அதனாலேயே பெருமுயற்சி எடுத்து அவற்றைக் கற்றேன்" என்றார் கோனி.
மீண்டும் பரிசோதனை
பின்னர் 2018 ஆம் ஆண்டு UCHealth Sue Anschutz-Rodgers Eye Center-ல் கண் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார் கோனி. அப்போதுதான் அந்த விஷயம் வெளியே தெரிந்திருக்கிறது. கோனிக்கு கிளாக்கோமா நோயோ, விழித்திரை பிளவோ ஏற்படவில்லை எனவும் அவருக்கு கண்புரை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எளிமையான அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்படக்கூடிய கண்புரையினால் சுமார் 15 வருடம் பார்வையற்று தவித்த கோனியை அனைவரும் கலங்கிய கண்களுடன் பார்த்திருக்கின்றனர்.
அயன் பட பாணியில்.. எக்குத்தப்பாக சிக்கிய இளம் பெண்! டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு!
அறுவை சிகிச்சை
நாள்பட்ட கண்புரை என்பதால் எத்தனை சதவீதம் கண்பார்வை திரும்பக் கிடைக்கும் எனச் சொல்ல முடியாது எனக் கூறிய மருத்துவர்கள் கோனிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை நடத்தி முடித்தனர். கண்களில் ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்திரிகளை அகற்றிய போது, அவரது கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்திருக்கிறது. ஆம். கோனி தான் இழந்த முழு பார்வையையும் மீண்டும் பெற்றிருக்கிறார்.
"சிறிய ஆப்பரேஷன் மூலமாக நான் பார்வையை பெற்றிருக்க முடியும் என அறிந்தபோது இத்தனை ஆண்டுகாலமாக இப்படி இருந்துவிட்டோமே என்பது தாங்கமுடியாத துயரத்தில் ஆழ்த்துகிறது. இருப்பினும் இப்படி ஒரு வாய்ப்பை வழங்கியதற்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். என்னைப்பற்றி எனக்குப் பின்னால் பேசுபவர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை. நான் என் அன்புக்குரிய கணவரான ராபர்டை மீண்டும் பார்க்கிறேன் என்ற மகிழ்ச்சியே எனக்குப் போதும்" என நா தழுதழுக்க சொல்கிறார் கோனி.
பிறந்து சில வாரங்களே ஆன தனது பேத்தியுடன் தற்போது நேரம் செலவிடும் கோனி, "எனக்கு வயதாகிவிட்டது என்பதே நினைவில்லை" என்கிறார். கோனிக்கு மொத்தம் 8 பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களோடும் தனது செல்ல நாயோடும் விளையாடுவதே தற்போது கோனிக்கு மிக முக்கிய பணியாக இருக்கிறதாம்..