லிப்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சில்மிஷம்... 10 நொடியில் ஆட்டத்தை முடித்த சிறுமி

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Pandidurai T | Jan 12, 2022 08:24 PM

குடும்ப சூழ்நிலைகளினால் பணிக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பான பணியிடம் கிடைப்பது அரிதாக உள்ளது. பார்வையால் பலாத்காரம் செய்யும் ஆண்கள், சிரித்து பேசினாலே பணிந்து போய்விடுவாள் என்று நினைத்து நூல் விடும் உயரதிகாரிகள் பல இடங்களில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. பெண்களுக்கு எதிராக நிகழும் சம்பவங்கள் அதிகரித்து கொண்டேதான் இருக்கின்றன.

The woman who attacked the abusive youth on lift

வளர்ந்த நாடுகளில் மட்டுமல்ல வளரும் நாடுகளிலும் உலகில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மூலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடரத்தான் செய்கிறது. சமீப காலமாக பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. பள்ளி முதல், கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு நிகழும் பாலியல் கொடுமையால் தற்கொலை தான் தீர்வு என்ற நிலைக்கு செல்கின்றனர்.

The woman who attacked the abusive youth on lift

கொரோனா காலகட்டத்திலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பள்ளி மாணவிகளின் தற்கொலைகள் அதிகரித்துள்ளன.  பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பெரும்பாலும் வெளியில் சொல்வதில்லை. ஏனெனில், அவ்வாறு தெரிவித்துவிட்டால், நான்கு சுவருக்குள் நடப்பது ஊருக்கே தெரிந்துவிடும் என்ற பயம்.  இதுவும் குற்றம் செய்பவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.

பொங்கல் விடுமுறைக்கு பின் 10 - 12ம் வகுப்புகளுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்?

தற்காப்பு கலை

ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெண்களை வலிமை உடையவர்களாகவும், உடல் அளவில் எதிர்த்து போராட கூடிய குணம் கொண்டவர்களாக வளர்க்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. பெண்கள் வெளியே செல்லும் போதோ, தனிமையில் வீட்டில் இருக்கும்போது சுயபாதுகாப்பு தேவைப்படுகிறது. தங்களை தாங்களே தற்காத்து கொள்ள ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். ஒரு ஆண் பார்க்கும்போதே தெரிந்துவிடும் அவன் எந்த நோக்கத்தோடும் நம்மோடு பேச விருப்பபடுகிறான்.

The woman who attacked the abusive youth on lift

பொது இடத்தில் இருக்கும்போதே பெண்களுக்கு நடக்கும் அநீதியை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது மிகவும் கொடூரமானது தான். அந்த வகையில், ஒரு சிறுமி தன்னிடம் அத்துமீறிய இருவரை பெரட்டி எடுக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது. தற்காப்பு கலை தெரிந்த அப்பெண் இருவரையும் சரமாரியாகா தாக்கியுள்ளார்.  லிஃப்ட்டில் உள்ள கேமிராவில் பதிவாகியுள்ளது.

பொங்கல் தொகுப்பில் பல்லி என புகார் சொன்ன தந்தை.. தற்கொலை செய்த மகன்... என்ன நடந்தது ?

வைரல் வீடியோ

பர்தா அணிந்த பெண் ஒருவர் லிஃப்ட் கதவை மூடுவதற்காக காத்திருந்தார். அப்போது லிப்டில் நுழைந்த இருவர், அடுத்த மூன்று நொடிகளிலேயே அப்பெண்ணிடம் இருந்த பையை பறிக்க முயற்சித்தனர். சுதாரித்து கொண்ட அப்பெண், குட்டி ஜாக்கிசானாக மாறி, அவர்கள் கை ஓங்குவதற்குள் அந்த பெண்ணின் கால்கள் இருவருக்கும் பதிலாக கிடைத்தது.

The woman who attacked the abusive youth on lift

10 நொடிக்குள் ஒரு ஆக்சன் படம் பார்த்தது போல் இருவரும் லிப்டின் தரையில் சரிந்தனர். இதைத் தொடர்ந்து, லிப்ட்டின் கதவு திறந்தவுடன், சிறுமி எளிதாக தனது பையை எடுத்துக்கொண்டு கேட்டை விட்டு வெளியேறினார். இந்த வீடியோ ற இன்ஸ்டாகிராமில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Tags : #GIRL ALONE #YOUTH #WOMAN #தற்காப்பு கலை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. The woman who attacked the abusive youth on lift | India News.