'சென்னையில்' 98% பேருக்கு 'இந்த' வகை கொரோனா பாதிப்பே... மாநகராட்சி ஆணையர் கூறியுள்ள 'முக்கிய' தகவல்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Apr 30, 2020 06:13 PM

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 98 சதவீதம் பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லை என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

98 Percent Coronavirus Cases In Chennai Are Asymptomatic

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் சென்னையில்தான் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு உயர்ந்த வண்ணமே உள்ளது. நேற்று மாலை வெளியிடப்பட்ட தகவலின்படி, சென்னையில் மட்டும் 768 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், "சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 98 சதவீதம் பேருக்கு எந்த வித அறிகுறியும் இல்லை. மேலும் பாதுகாப்பு கருதியே கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.