தப்புதான்.. அதுக்குன்னு இப்படியா? .. ‘அண்டா திருடியவருக்கு’ ஊர்மக்கள் கொடுத்த தண்டனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Arunachalam | May 09, 2019 07:38 PM

வீடு புகுந்து அண்டாவை திருடியவனை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.

boy tries to loot the vessels from the neighbour house

வேலூரில் அருகே தோட்டப்பாளையத்தை சேர்ந்த வேளாங்கண்ணி என்ற பெண் வீட்டை பூட்டாமல் பக்கத்து வீட்டிற்கு சென்றதை மறைந்திருந்து நோட்டமிட்ட இளைஞன் வேளாங்கண்ணி வெளியே சென்றவுடன் வீட்டிற்குள் புகுந்து அண்டா உள்ளிட்ட பாத்திரங்களை திருட முயன்றுள்ளான்.

இந்நிலையில், இதை கண்ட அப்பகுதி மக்கள் திருட முயன்ற அந்த இளைஞனை துரத்தி சென்று மடக்கி பிடித்தயுள்ளனர். இதனையடுத்து, அவனை மின்கம்பத்தில் கட்டி வைத்து பொது மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதையடுத்து, தகவலறிந்து வந்த வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த இளைஞனை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அந்த இளைஞனிடம் நடத்திய விசாரணையில் அவன் பெயர் கலிஷா என்பதும், சிறு சிறு திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

Tags : #VELLORE #CRIME