மறைந்த டான்சர் ரமேஷின் பல வருஷ கனவு இதுதானா.? கலங்கும் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Jan 27, 2023 10:21 PM

டிக் டாக் மற்றும் சமூக வலைத்தளம் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனவர் டான்சர் ரமேஷ். இன்று ரமேஷ் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருப்பது, அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Dancer Ramesh opens up about his aim in dance Video

சென்னையை சேர்ந்த ரமேஷ் தெருக்களில் நடனமாடி அந்த வீடியோக்களை சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு வந்தார். நாட்கள் செல்ல செல்ல இந்த வீடியோக்கள் பெருமளவு வைரலாகின. மேலும், ரமேஷுக்கு என தனியாக ரசிகர் பட்டாளமே உருவானது. இதனிடையே பலரின் விருப்பதற்குரிய நபராகவும் வலம் வந்த டான்சர் ரமேஷ், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் வாயிலாக பெரும் ரசிகர்களை அவர் பெற்றதோடு, அவருடைய திறமையை கண்டு திரையுலக பிரபலங்களும் பாராட்டு தெரிவித்திருந்தனர்.

Dancer Ramesh opens up about his aim in dance Video

இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற அஜித் குமாரின் துணிவு திரைப்படத்திலும் தோன்றி இருந்த டான்சர் ரமேஷ், அதில் சில இடங்களில் அசத்தலாக நடனமாடவும் செய்திருந்தார். இதுவும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

இதனிடையே இன்று அவர் மரணமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் தன்னுடைய கனவுகள் குறித்து அவர் பேசியிருந்த பழைய வீடியோ ஒன்று தற்போது அவரது ரசிகர்களிடையே அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் கன்னியாகுமரி ஆண்டோ மற்றும் டான்சர் ரமேஷ் ஆகிய இருவரும் நடனத்தின் மீதுள்ள விருப்பமும் தங்களுடைய வளர்ச்சி குறித்தும் பல தகவல்களை பகிர்ந்திருந்தனர்.

Dancer Ramesh opens up about his aim in dance Video

அந்த வீடியோவில் ரமேஷ்,"ஆரம்ப நாட்களில் நீ கடைசி வரையில் ரோட்ல குப்பை கொட்ட போற என பலரும் சொன்னாங்க. அதையெல்லாம் நான் பெருசா எடுத்துக்குறது இல்ல. எனக்கு என்ன தேவையோ அது கிடைக்கும்னு நம்புறேன். டான்ஸ்-ல எனக்கு பிரபுதேவா, லாரன்ஸ், சிம்பு ரொம்ப பிடிக்கும். நான் இவங்களை பார்த்து நிறைய கத்துக்கிட்டேன். இப்போ அவங்களுக்கு கோரியோகிராஃப் பண்ணனும்னு ஆசை இருக்கு. மன்னிச்சுக்கங்க. இது எனக்குள்ள இருக்க ஆசைதான். பிரபுதேவா சாருக்கு கோரியோகிராஃப் பண்ணனும். ஒரு ரெண்டு ஸ்டெப்பாவது அவர் என்ன மாதிரி ஆடணும்னு நெனச்சிட்டுருக்கேன்" என தெரிவித்திருந்தார். இந்த வீடியோ அவரது ரசிகர்களிடையே தற்போது அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

 

Tags : #DANCER RAMESH #DREAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dancer Ramesh opens up about his aim in dance Video | Tamil Nadu News.