சிறுவர்களுக்கு 'எமனாக' வந்த மின்னல்... 'எரிந்த' உடல்களை பார்த்து... 'கதறித்துடித்த' பெற்றோர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மழையை வேடிக்கை பார்த்த சிறுவர்கள் மின்னல் தாக்கி இறந்த சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நேற்று மாலை 5 மணியளவில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். ஸ்ரீமுஷ்ணம் கொம்பாடி பகுதியை சேர்ந்த ராம்குமார்(17) மற்றும் பிரவீன்குமார்(16) ஆகிய இரு சிறுவர்களும் நேற்று மாலை கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க விருத்தாசலம் சாலையில் உள்ள அருமைசெட்டிகுளம் என்னும் பகுதிக்கு சென்றனர்.
மழை பெய்ததால் ஓரமாக ஒதுங்கி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். திடீரென பிரவீன்குமார், ராம்குமார் இருவரையும் மின்னல் தாக்கியது. தொடர்ந்து அவர்கள் இருவரின் உடல்களும் பற்றியெரிய துவங்கின. இதைப்பார்த்த அப்பகுதி இளைஞர்கள் தீயை அணைத்து 2 பேரையும் சிகிச்சைக்காக ஸ்ரீமுஷ்ணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த பெற்றோர்கள், சிறுவர்கள் 2 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதது காண்போர் நெஞ்சை கலங்க வைத்தது.

மற்ற செய்திகள்
