"உன் உயிர் என் கைலதான்! வண்டி ஏத்தி கொல்லப்போறேன்!".. 'கோயம்பேட்டில்' இருந்து சொந்த ஊருக்கு 'போன 'கொரோனா' நோயாளி விடுத்த 'கொலைமிரட்டல்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 15, 2020 10:23 AM

கோயம்பேட்டிலிருந்து திட்டக்குடி அருகே உள்ள கிராமம் ஒன்றுக்கு ரகசியமாக சென்று பதுங்கி இருந்தவர்கள் குறித்து சுகாதாரத் துறைக்கு தகவல் அதிகாரிக்கு தகவல் கொடுத்த கிராம நிர்வாக அலுவலருக்கு கொரோனா பரிசோதனையில் கொரோனா உறுதி ஆகியதை அடுத்து அந்த நபர் மிரட்டல் கிராம நிர்வாக அலுவலருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

corona patient threaten VAO for informing health officials about him

கோயம்பேட்டிலிருந்து கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்றவர்களால் விருத்தாசலம், திட்டக்குடி, தொழுதூர் உள்ளிட்ட மற்ற பகுதிகளில் கொரோனா பரவியது குறிப்பிடத்தக்கது. இவர்களில் திட்டக்குடி அருகே உள்ள அகரம் கிராமத்துக்கு சென்று ரகசியமாக பதுங்கியிருந்த 29 பேர் பற்றிய தகவலை கிராம நிர்வாக அலுவலக அதிகாரி பஷீர் என்பவர் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து விரைந்து வந்த அதிகாரிகள் அந்த 29 பேரையும் பள்ளிக் கூடத்தில் தங்க வைத்து தனிமைப்படுத்தினர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின்போது 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.‌

இதனையடுத்து மீதமுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட அறிவுறுத்தப்பட்டதோடு அந்த 13 பேரும் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இந்தநிலையில் அந்த 13 பேரில் அகரம் கிராமத்தைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் தனது பெயரை கிராம நிர்வாக அலுவலர் பஷீர், சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் போட்டுக் கொடுத்ததால் ஆத்திரம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மணிமாறம் கிராம நிர்வாக அதிகாரியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு, “என்னைக்கா இருந்தாலும் உன் உயிர் என் கைலதான்.. என் பேரு மணிமாறன்.. நீ இல்லனா, என் பேரை லிஸ்ட்ல எழுதிக் கொடுத்தது யாரு? உன்ன வண்டி ஏத்தி கொல்லப் போறேன் பாத்துக்க” என்று மிரட்டியதோடு தனது தெருவில் மருந்து தெளித்து வேலி போட்டு அடைத்ததற்காகவும், தனக்கு கொரோனா இருப்பதை காட்டிக்கொடுத்து தன்னை தனிமைப்படுத்தியதற்காகவும் சிகிச்சை முடிந்து வெளியே வந்ததும் முதல் வேலையாக விஏஓ பஷீரின் உயிரை எடுக்க உள்ளதாகவும் ஆவேசமாக பேசியுள்ளார்.

இதுகுறித்து மணிமாறன் மீது பஷீர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.‌ ஆனால் தனக்கும் தன் சமூகத்துக்கும் தன் குடும்பத்தாருக்கும் தன் மூலமாக கொரோனா பரவி விடக்கூடாது என்கிற சுயக்கட்டுப்பாடு இருப்பவர்களுக்கு மத்தியில் தன்னுடைய நோயை மறைக்க முயன்றதோடு நோய் பரவலைத் தடுக்க தக்க சமயத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த கிராம நிர்வாக அதிகாரியை மிரட்டுவது தேவையற்றது என்று போலீசார் குறிப்பிட்டதோடு குணமடைந்த பின் மணிமாறன் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.