'ஒரே ஒருத்தர தவிர அத்தனை பேருக்கும் பாசிட்டிவ்?!!'... 'ஒரு கிராமத்துக்கே'.... 'ஒட்டுமொத்தமா ஷாக் கொடுத்த கொரோனா!!!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாலஹாலில் உள்ள ஒரு கிராமம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சல பிரேதசத்தின் லஹால் பள்ளத்தாக்கின் தோராங் கிராமத்தில் 52 வயதான பூஷன் தாகூர் என்பவரை தவிர்த்து மற்ற அனைவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள்தொகை விகிதத்தை பொறுத்தவரை லஹால்-ஸ்பிட்டி பள்ளத்தாக்கு மாநிலத்திலேயே மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக மாறியுள்ளது. இதைத்தொடர்ந்து சுற்றுலாப்பயணிகள் லஹால் எல்லைக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டு அந்த கிராமம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள அதிகாரிகள், "மணாலி-லேஹ் நெடுஞ்சாலையில் உள்ள தோராங் கிராமத்தில் வெறும் 42 பேர் மட்டுமே உள்ளனர். ஏனெனில் முன்னரே பெரும்பாலான மக்கள் அங்கிருந்து குளிர் காலத்தினால் குலுவிற்கு குடிபெயர்ந்துள்ளனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் கிராம மக்களாகவே முன்வந்து பரிசோதனை செய்துகொண்டதில் 42 பேரில் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
