கொசு கடிப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா என மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கியுள்ளது.

கொசுக்கள் மூலம் டெங்கு போன்ற கொடிய நோய்கள் பரவுவதுபோல் கொரோனாவும் பரவுமா என அச்சமடைந்த பொதுமக்கள் தங்களது சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள மத்திய சுகாதரத்துறை கொசுக்களால் கொரோனா பரவாது என உறுதி அளித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் மூலமே மற்றவர்களுக்கு பரவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை என்றும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மட்டும் பிறருக்கு அது பரவமால் இருக்க முகக்கவசம் அணியலாம் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள் மற்றும் பணிவிடை செய்பவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
