ஒரே நாளில் தமிழகத்தில் 'பதிவான' அதிக 'பாதிப்பு'... 'ஆறு' பேர் பலி... முழு விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 82 பேர் வேறு மாநிலங்களில் இருந்தும், மற்ற நாடுகளில் இருந்தும் விமானங்கள் மூலம் தமிழகம் வந்தடைந்தவர்களாவர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த விவரத்தை தமிழக சுகாதாரத்துறை நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியான தகவலில் தமிழகத்தில் 938 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுளள்து. இதுவரை, ஒரு நாளில் தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட எண்ணிக்கையாக இது பதிவானது. அதே நேரம், சென்னையில் மட்டும் 616 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தில் 21,184 பேர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12,000 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 9,021 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று ஆறு பேர் இந்த கொடிய வைரஸ் மூலம் உயிரிழந்த நிலையில் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 4,79,155 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவு பெறும் நிலையில் அடுத்த கட்ட ஊரடங்கு குறித்து நாளை அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
