'ஒரு கருப்பு ஆடு இருக்கும்னு பாத்தா... ஆட்டு மந்தையே இருக்கா?'.. பிரிட்டன் முதலான நாடுகளில் 'அனைத்து நிறுவனங்களிலும்' இவங்க ஊடுருவி இருக்காங்க... 'கசிந்த கோப்புகள்'!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டன் தூதரகம் உட்பட அனைத்து முக்கிய நிறுவனங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்மையாக இருந்த நபர்கள் ஊடுருவி உள்ளதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி வெளியான சில ரகசிய கோப்புகள் இந்த அதிர வைக்கும் தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளன. சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு (CCP) உண்மையான நபர்கள் Boeing , Volkswagen, Pfizer ,AstraZeneca, ANZ, HSBC முதலான பன்னாட்டு நிறுவனங்களில் ஊடுருவி பல விதமான பணிகளில் இருந்து வருவது இந்த கோப்புகள் மூலம் தெரியவந்திருக்கிறது. பிரிட்டனில் ஒவ்வொரு முறையும் பாதுகாப்பு நிறுவனங்கள், வங்கிகள் ,மருந்து தயாரிப்பு உள்ளிட்ட நிறுவனங்களில் சீனர்கள் ஊடுருவி உள்ளதாகவும் இதன் மூலம் தகவல்கள் பரவியுள்ளன.
இதெல்லாத்தையும் விட அதிர்ச்சி அளிக்கும் தகவலாக கம்யூனிஸ்ட் கட்சி ரகசியங்களை காப்போம், கட்சிக்கு உண்மையாக இருப்போம், கடினமாக உழைப்போம், வாழ்நாள் முழுவதும் கட்சிக்காக போராடுவோம், கட்சிக்காக ஒரு நாளும் துரோகம் இழைக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டவர்களாக இவர்கள் பிரிட்டன் தூதரகங்களில், பணி செய்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த உறுப்பினர்களில் ஒருவர் ஷாங்காயில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில் மூத்த அலுவலராக பணி புரிவதாகவும் அதன் தலைமையகத்தில் தான் பிரிட்டன் பாதுகாப்பு அமைப்புகளின் உளவுத்துறை அதிகாரிகளின் வீடுகளும் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை சீனாவுக்கு இந்த நபர்களில் யாரும் உளவு பார்த்ததற்கான ஆதாரங்கள் இல்லை எனினும் இவர்கள் உளவு பார்த்திருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கான ஆதாரங்களும் இல்லை என்றும் கூறப்படுகிறது. சீன அரசை எதிர்க்கும் சீன நாட்டவர் ஒருவரே இந்த தகவல்களை வேண்டுமென்றே வெளியிட்டு இருக்கலாம் என்றும் அந்த நபர் ஷாங்காய் அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவராக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
எனினும் அந்த நபர் சீனாவிடம் பிடிபட்டால் தான் கொல்லப்படலாம் என்று தெரிந்தும் அந்த நபர் துணிச்சலாக இந்த தகவலை சேகரித்து வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரபரப்பான தகவல்கள் வெளிவந்ததை அடுத்து நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாக இந்த விஷயம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.