கொரோனாவோட மோசமான காலம் எப்போ வரப்போகுது தெரியுமா...? '2015-ல நான் எச்சரித்ததை விட கொரோனா ஆபத்தானது...' - பில்கேட்ஸ் கருத்து...!
முகப்பு > செய்திகள் > உலகம்மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் கொரோனாவின் தாக்கம் இனி அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்கள் தொற்றுநோயின் மோசமான காலமாக இருக்கலாம் எனக் கூறியுள்ளார்.
மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும் , பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவருமான பில் கேட்ஸ் இதற்கு முன் வைரஸ் பெருந்தொற்றின் விளைவை குறித்து எச்சரிக்கை கொடுத்து அதன்படியே தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே அதன் இயல்பான சூழலில் இருந்து விலகி இருப்பது நாம் அறிந்தது. இந்நிலையில் மீண்டும் பில் கேட்ஸ் கொரோனா குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, 'இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் எவல்யூஷன் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்பால் மரணமடையலாம் என கணித்துள்ளது. முக கவசம் அணிவது போன்ற விதிகளை பின்பற்றினால் அந்த இறப்புகளில் பெரும் சதவீதத்தை நாம் தவிர்க்க முடியும்.
தற்போது கடந்த சில வாரங்களில், அமெரிக்காவில் அதிக அளவில் பாதிப்புகள், இறப்புகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்து உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டில் ஒரு தொற்று நோய் குறித்து நான் எச்சரித்தேன் அப்போது மரணங்கள் அதிகம் ஏற்படும் என கூறினேன். இந்த கொரோனா வைரஸ் அதைவிட அதிக ஆபத்தானது.
கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் அதிக மரணங்கள் நிகழ்ந்து உள்ளது. எனது அறக்கட்டளை தடுப்பூசி குறித்த ஆராய்ச்சிகளுக்கு நிறைய நிதியளித்து வருகிறது. மனிதகுலம் அனைவருக்கும் அமெரிக்கா உதவ வேண்டும், அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்ற நாடுகளில் உள்ள மக்களுக்குச் செல்வதற்கு முன்பு தடுப்பூசி அமெரிக்கர்களுக்கு விநியோகிக்க முன்னுரிமை அளிக்கிறார். நாம் முன்னேற்றம் என்பதில் முற்றிலும் சுயநலமாக இருக்கக்கூடாது.
இனி அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்கள் தொற்றுநோயின் மோசமான காலமாக இருக்கலாம்' எனக் கூறியுள்ளார்.