'இடியாய் இறங்கிய செய்தி'... 'கொரோனாவுக்கு பலியான உலகின் முதல் பிரதமர்'... அதிர்ச்சியில் நாட்டு மக்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா உலக தலைவர்களையும் விட்டு வைக்காத நிலையில், முதல் முறையாகப் பிரதமர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

ஆப்ரிக்க கண்டத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள சிறிய நாடு எஸ்வதினி. ஸ்வாசிலாந்து என முன்னதாக இந்த நாடு அழைக்கப்பட்டு வந்தது. 12 லட்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட இந்த சிறிய நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்களின் எண்ணிக்கை என்பது அதிகம். உலகையே ஆட்டம் காண வைத்த கொரோனா இந்த நாட்டையும் விட்டு வைக்கவில்லை.
இங்கு 6,700 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 127 பேர் பலியாகி இருக்கின்றனர். இதனிடையே இந்த நாட்டின் அதிபராகக் கடந்த 2018ஆம் ஆண்டு பதவியேற்றவர் அம்ப்ரோஸ் லாமினி. இவருக்கு கொரோனா தொற்று எதுவும் இல்லை, அவர் நலமுடன் தான் இருக்கிறார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அவர் திடீரென ஜோகன்ஸ்பெர்க்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஆனால் அவருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல், உடல்நிலை சீராகவே இருந்துள்ளது. இந்நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக நேற்று பிரதமர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் அம்ப்ரோஸின் மரணம் இது எஸ்வதினி நாட்டின் மக்களைப் பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனை அந்நாட்டின் துணைப் பிரதமர் தெம்பா மசுகு உறுதிப்படுத்தி இருக்கிறார். 52 வயதான அம்ப்ரோஸ் லாமினி உலக தலைவர்களில் கொரோனாவுக்கு பலியான முதல் பிரதமர் ஆவார்.

மற்ற செய்திகள்
