கொரோனாவில் இருந்து மீண்டவர்களை தாக்கும் அரியவகை ‘பூஞ்சை’.. பார்வை இழப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுவதாகவும், அவர்களில் 50 சதவீதம் பேருக்கு பார்வை இழப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனை மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதாலும், ஸ்டெராய்டுகள் வழங்குவது மற்றும் இணை நோய்கள் இருப்பதாலும் முகார்மிகாசிஸ் (Mucormycosis) என்ற பூஞ்சை தொற்று மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாக இஎன்டி பிரிவு மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்கூட்டியே பரிசோதனை செய்து கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளிப்பதன் மூலமே பாதிப்பை தவிர்க்க முடியும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மற்ற செய்திகள்
