ஷாப்பிங் மாலில் இருந்து கால் தவறி கீழே விழுந்த இளம்பெண்.. பிறந்த நாள் பரிசு வாங்க சென்றபோது நடந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஷாப்பிங் மாலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | 3 வருஷத்துக்கு அப்புறம் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்… அறிவிப்பு வந்ததும் போட்ட வைரல் Tweet
கர்நாடக மாநிலம் பெங்களூர் ஃப்ரேசர் டவுன் பகுதியை சேர்ந்தவர் லியா ரெஜினா. ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர் கிறிஸ் பீட்டர். இவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் நேற்று தனது நண்பருக்கு பிறந்தநாள் பரிசு வாங்க பெங்களூர் பிரிகேட் சாலையில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலுக்கு சென்றுள்ளனர்.
அங்கு பரிசு பொருளை வாங்கிவிட்டு இருவரும் 2-வது மாடியின் படிக்கட்டில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக லியா ரெஜினா கால்கள் தடுமாறி மாலின் ஜன்னல் வழியாக கீழே விழ முற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கிறிஸ் பீட்டர், உடனே அவரை உள்ளே இழுக்க முயன்றுள்ளார். ஆனால் அவரும் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து, இருவரும் மாடியில் இருந்து கீழே விழுந்தனர்.
இந்த விபத்தில் லியா ரெஜினா மற்றும் கிறிஸ் பீட்டருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி லியா ரெஜினா உயிரிழந்தார். கிறிஸ் பீட்டருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | Tesla-வில் வேலை.. Twitter-ல் விளம்பரம் செய்த எலான் மஸ்க்.. கவனம் பெறும் டுவிட்..!

மற்ற செய்திகள்
