மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நடந்தா... முதல் சிக்கல் 'சிஎஸ்கே'வுக்கு தான்!.. என்ன இப்படி ஆகிடுச்சு?.. கடைசி நேரத்தில் காலை வாரி விட்ட முடிவு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் 2021 தொடர் மீண்டும் தொடங்கினால் சிஎஸ்கே மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
இந்தியாவில் உச்சத்தில் இருக்கும் கொரோனா 2வது அலை காரணமாக, ஐபிஎல் 2021 தொடரை பாதியில் நிறுத்தியது, பிசிசிஐ. குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஈந்த சீசனில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த போது, ஐபிஎல் நிறுத்தப்பட்டது சிஎஸ்கே ரசிகர்களை வருத்தம் அடையைச் செய்தது.
அதேசமயம், இந்த ஆண்டு இறுதியில், அதாவது டி20 உலகக் கோப்பை முடிந்த பிறகு, ஐக்கிய அரபு அமீரகத்தில் மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை எங்கு நடத்தினாலும் அதில் இங்கிலாந்து வீரர்கள் சர்வதேச போட்டி காரணமாக பங்கேற்க வாய்ப்பில்லை என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் தெரிவித்தது.
இதுகுறித்து, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் ஆஷ்லே ஜைல்ஸ், அடுத்தடுத்த போட்டி அட்டவணைப்படி எங்களுக்கு நிறைய சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இருக்கின்றன. அவற்றில் இங்கிலாந்து வீரர்களை முழுமையாகப் பயன்படுத்த திட்டமிட்டு வருகிறோம்.
ஐபிஎல் போட்டி மீண்டும் எப்போது, எங்கு நடத்தப்படும் என்பது இப்போது வரைக்கும் யாருக்கும் தெரியாது. அதேநேரம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து எங்களுக்கு தொடர்ச்சியாக போட்டிகள் உள்ளன. இதில் டி20 உலகக் கோப்பை மற்றும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் முக்கியமானது. இந்த போட்டிகளை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம் என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவால், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர், லிவிங்ஸ்டன் (ராஜஸ்தான் ராயல்ஸ்), சாம் கர்ரன், மொயீன் அலி (சென்னை சூப்பர் கிங்ஸ்), கிறிஸ் ஜோர்டான், டேவிட் மலான் (பஞ்சாப் கிங்ஸ்), கிறிஸ் வோக்ஸ், சாம் பில்லிங்ஸ், டாம் கர்ரன் (டெல்லி கேபிடல்ஸ்), இயான் மோர்கன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய் (ஐதராபாத் சன் ரைசர்ஸ்) ஆகிய 14 வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போகலாம்.
இந்த முடிவால், பெரிதாக பாதிக்கப்படும் அணி என்றால், ராஜஸ்தான் ராயல்சும், சென்னை சூப்பர் கிங்ஸும் தான். ராஜஸ்தான் அணியில் ஏற்கனவே ஸ்டோக்ஸ் காயம் காரணமாக வெளியேறிவிட்ட நிலையில், மீண்டும் ஐபிஎல் தொடங்கப்பட்டால் ஜோஸ் பட்லர், ஆர்ச்சர் விளையாட முடியாது. இவர்கள் இருவரும் அந்த அணியின் பேட்டிங், பவுலிங்கின் தூண்கள்.
சிஎஸ்கேவை பொறுத்தவரை நடப்பு தொடரில் சுரேஷ் ரெய்னாவின் ஒன் டவுன் ஸ்பாட்டில் இறங்கி, பந்துகளை சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டும், ஸ்பின் டிராக் பிட்ச்களில், விக்கெட்டுகளை வீழ்த்தி தோனிக்கு பக்கபலமாக இருந்த மொயீன் அலியை சென்னை சூப்பர் கிங்ஸ் இழக்க நேரிடும்.
அதைவிட முடிக்கியமாக, ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டராகவும், தோனியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் இருந்த சாம் கரணை சிஎஸ்கே இழப்பது தான் பெரும் சரிவு. ஒருவேளை, மீண்டும் ஐபிஎல் தொடங்கப்பட்டால், நிச்சயம் இவ்விரு வீரர்களின் மிஸ்ஸிங், அணியில் தாக்கத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.