‘மக்கள் வீட்டை விட்டு வெளியே வராதீங்க’.. நிவர் புயல் எதிரொலி.. முதல்வர் ‘முக்கிய’ அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நிவர் புயல் காரணமாக நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை விடப்படுகிறது என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
நாளை நிவர் புயல் அதி தீவிர புயலாக கரையை கடக்க உள்ளது. இந்த நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள புயல் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், கடலோர மாவட்டங்களில் தனி கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் நிவர் புயல் காரணமாக நாளை (25.11.2020) தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை விடப்படுகிறது என முதல்வர் தெரிவித்தார். புயல் கரையை கடக்கும்போது மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காகவே நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும், அத்தியாவசிய பணியில் இருப்பவர்கள் மட்டுமே நாளை பணிபுரிவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் புயல் கரையை கடக்கும் வரை பொதுமக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும், வெளியே வரவேண்டாம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.