‘க்ரியா ராமகிருஷ்ணன்’ மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ் பதிப்புலக முன்னணி பதிப்பாளர் க்ரியா ராமகிருஷ்ணன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

க்ரியா பதிப்பக ஆசிரியரும், தமிழ் பதிப்புலகின் முன்னணி பதிப்பாளருமான க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
தமிழ் பதிப்புலகத்தின் முன்னணி பதிப்பாளரும், க்ரியா பதிப்பகத்தின் ஆசிரியருமான திரு.க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் இன்று மறைவுற்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன்.
அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், பதிப்புலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/kNc9HCHuBj
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 17, 2020
அவரின் மறைவு குறித்தும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ் பதிப்புலகத்தின் முன்னணி பதிப்பாளரும், க்ரியா பதிப்பகத்தின் ஆசிரியருமான திரு.க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் இன்று மறைவுற்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், பதிப்புலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
