"ஒரு வருசமா கூட இருந்தும் தெரியாம போச்சே".. பல வருஷம் கழிச்சு EX லவ்வர் பத்தி தெரிஞ்ச உண்மை.. திடுக்கிடும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > உலகம்பெண் ஒருவர் தான் ஒரு வருடம் காதலித்த நபர் தொடர்பாக பல ஆண்டுகள் கழித்து தற்போது தெரிவித்துள்ள விஷயம், இணையத்தில் அதிகம் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

ஸ்டெல்லா பாரிஸ் என்ற பெண் ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆண்ட்ரூ என தன்னை அறிமுகம் செய்து கொண்ட நபரை காதலித்து வந்துள்ளார்
ஒரு ஆண்டுகள் ஆண்ட்ரூ மீது அதிக அன்பு காட்டி வந்த ஸ்டெல்லா, அவருடன் ஒன்றாக வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, கேளிக்கை விடுதி ஒன்றில் வைத்து ஆண்ட்ரூவை ஸ்டெல்லா சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் பின்னர், நண்பர்களாக பழகி வந்த அவர்கள் ஒருவரை ஒருவர் காதலிக்கவும் தொடங்கி உள்ளனர். ஆரம்பத்தில் ஆண்ட்ரூவின் வசதி காரணமாக ஈர்க்கப்பட்ட ஸ்டெல்லா, அதன் பின்னர் அவரது குணம், பாசிட்டிவாக ஆலோசிப்பது உள்ளிட்ட பல விஷயங்களால் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளார்.
அப்படி இருக்கையில், ஒரு வருடம் இவர்கள் உறவில் இருந்த போது ஆண்ட்ரூவிடம் நிறைய அசாதாரண காரியங்களை உணர்ந்துள்ளார் ஸ்டெல்லா. அதாவது, போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர அனுமதி மறுப்பது, வீட்டில் இருக்கும் போதும் வெளியே வரும் போது தனது ஹேர் ஸ்டைலை மாற்றுவது என ஆண்ட்ரூவின் காரியங்கள், ஸ்டெல்லாவுக்கு சற்று குழப்பத்தை கொடுத்துள்ளது. அதே போல, வெளியே எங்காவது சென்றால் முகத்தை மறைத்த படி ஆண்ட்ரூ வருவதையும் வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
இதன் பின்னர் ஒரு வருடம் காதலில் இருந்த ஸ்டெல்லா மற்றும் ஆண்ட்ரூ ஆகியோர், சில மனக்கசப்பு காரணமாக பிரிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, பல ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், தான் முன்பு காதலித்த ஆண்ட்ரூ யார் என்பது பற்றிய அதிர்ச்சி தகவல், ஸ்டெல்லாவுக்கு தெரிய வந்துள்ளது. தன்னை காதலிப்பதற்கு பல வருடங்கள் முன்பாக, சில பேருடன் இணைந்து, ஒரு நபரை பொது வெளியில் ஆண்ட்ரூ கொலை செய்தது தான் அது.
அது மட்டுமில்லாமல், கிறிஸ்டோபர் என்ற பெயரை ஆண்ட்ரூ என மாற்றி தன்னிடம் பழகி வந்ததையும் ஸ்டெல்லா அறிந்துள்ளார். லண்டனில் தேடப்பட்டு வந்த மிக முக்கியமான குற்றவாளிகளில் ஒருவரை தான் காதலித்து அவருடன் பொழுதை கழித்து வந்தேன் என்ற விஷயம், ஸ்டெல்லாவை கடும் மன வேதனையில் ஆழ்த்தி உள்ளது. கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ள நிலையில், முதல் முறையாக தற்போது தான் இது பற்றி ஸ்டெல்லா மனம் திறந்துள்ளார்.
மேலும், பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளியான கிறிஸ்டோபர், தற்போது போலீசாரிடம் சிக்கி 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வருவதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
Also Read | சோர்வாக அமர்ந்தபடி.. வயசான மனுஷன் செஞ்ச விஷயம்.. "நெட்டிசன்கள் மனதை உடைத்த வீடியோ!!

மற்ற செய்திகள்
