வீட்டுல இருந்து திடீர்ன்னு காணாம போன நாற்காலி.. "எங்கடா போச்சு'ன்னு தேடுனப்போ".. இளம்பெண்ணுக்கு தலையே சுத்த வெச்ச உண்மை!!
முகப்பு > செய்திகள் > உலகம்பெண் ஒருவரின் வீட்டில் இருந்த பொருட்கள் திடீரென மாயமாகி வந்த நிலையில், அவை இருந்த இடம் தொடர்பான தகவல், சற்று பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

லியா என்ற பெண் ஒருவர், தான் வீட்டின் தோட்டத்தில் இருந்த நாற்காலிகள் திடீரென காணாமல் போனதை உணர்ந்துள்ளார்.
நான்கு நாற்காலிகளுடன் இருக்கும் பர்னிச்சர் செட்டில் இரண்டு நாற்காலிகள் மட்டுமே அவரது தோட்டத்தில் இருந்துள்ளது.
தனது வீட்டு தோட்டத்தில் இருந்த நாற்காலி எப்படி காணாமல் போயிருக்கும் என்ற குழப்பத்தில் இருந்த லியாவுக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. இதற்கு காரணம், தனது வீட்டு தோட்டத்தில் இருக்க வேண்டிய இரண்டு நாற்காலிகள், அவரது பக்கத்து வீட்டிலுள்ள தோட்டத்தில் கிடந்துள்ளது என்பது தான். எனது பக்கத்து வீட்டுக்காரர்கள், எனது வீட்டில் இருந்த பர்னிச்சர் பொருளை திருடி விட்டனர் என குறிப்பிட்டு வீடியோ ஒன்றை லியா பகிர்ந்துள்ளார்.
அதில், அவரது வீட்டில் இருக்கும் நாற்காலி போலவே அவரின் பக்கத்து வீட்டிலுள்ள தோட்டத்திலும் இரண்டு நாற்காலிகள் கிடக்கிறது. இதன் காரணமாக விரக்தி அடைந்த லியா, அங்கே நின்று கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரரிடம் நாற்காலி விவகாரம் பற்றி கேட்டுள்ளார். உங்கள் வீட்டில் இருந்து யாரோ எனது நாற்காலியை திருடி விட்டார்கள் என்பதையும் லியா விளக்கி உள்ளார்.
இதன் பின்னர் அந்த நபரும் நாற்காலிகளை எடுத்து லியா கையில் கொடுத்துள்ளார். தொடர்ந்து, ஒரு நாள் காலையில் எழுந்து பார்த்த போது நாற்காலிகள் அங்கே இருந்தது என்றும், தனக்கே மிக அதிர்ச்சியாக இருந்தது என்றும் வினோதமான காரணத்தை அந்த பக்கத்து வீட்டுக்காரர் குறிப்பிட்டுள்ளார்.
அருகே உள்ள வீட்டில் இருந்து இப்படி பொருட்களை எடுத்தது தொடர்பான வீடியோவைக் கண்டு நெட்டிசன்கள் பலரும் பல விதமான கமெண்ட்டுகளை குறிப்பிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
