'பரதனாக இருந்த ஓ.பன்னீர் செல்வம்'...'ஓபிஎஸ் இதை செய்தால் வரவேற்போம்'... தினகரன் பரபரப்பு பதில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அ.ம.மு.க தலைமையில் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்ற பிறகு அ.தி.மு.கவை மீட்டெடுப்போம் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

தமிழகச் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த சூழ்நிலையில் சென்னையில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தினகரன் பேசிய கருத்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரதனாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தவறான முடிவால் ராவணனுடன் சேர்ந்தார். தற்போது அவர் மனக்கசப்பில் இருக்கிறார். சசிகலாவிற்கு மீண்டும் ஆதரவு கொடுத்தால் அதை வரவேற்போம். அ.ம.மு.க தலைமையில் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்ற பிறகு அ.தி.மு.கவை மீட்டெடுப்போம்.
சசிகலா நலமுடன் உள்ளார். வரும் 24ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று வீட்டில் அவரின் படத்திற்கு சசிகலா மரியாதை செலுத்த உள்ளார்.

மற்ற செய்திகள்
