'சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு...' ஒரு நாளைக்கு எத்தனை டோக்கன்...? - டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு..."
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மாநகரங்களில் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் மதுபான கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவி பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் இன்று வரை சென்னையில் மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
மேலும் தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்கப்பட்ட நிலையில் சென்னையில் மட்டும் டாஸ்மாக் திறக்க தடை நீடித்திருந்தது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் சென்னை மாவட்டத்திலும் மதுபான கடைகளை திறக்கபடும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையில் மதுக்கடைகள் திறந்திருக்கும் எனவும், நாளொன்றிற்கு, ஒரு மதுக்கடைக்கு 500 டோக்கன்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு விற்பனை செய்யப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மால்கள் மற்றும் கொரோனா நோய்க் கட்டுபாட்டுப் பகுதிகளில் இருக்கும் மதுபான கடைகள் திறக்கப்படமாட்டாது எனவும் அறிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
