ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட மகள்.. வேதனையில் இறந்த தந்தை.. "இப்ப அம்மாவும்".. மனம் நொறுங்க வைக்கும் சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், சென்னை பரங்கிமலையில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் வைத்து கல்லூரி மாணவி சத்யஸ்ரீ, இளைஞர் ஒருவரால் ரயில் முன்பு தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

Images are subject to © copyright to their respective owners.
Also Read | LEO விமான பயணத்தில் விஜய்.. கூட யார் இருக்காங்கன்னு பாருங்க.. வைரல் Pic..!
மேலும் அங்கிருந்த பொது மக்களும் இளைஞரை பிடிக்க முயல, அதற்குள் அவர் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட சூழலில் ஒருதலை காதலால் இந்த சம்பவம் நடந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, துரைப்பாக்கம் அருகே பதுங்கி இருந்த சதீஷ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய போது அவர் மாணவி சத்யஸ்ரீயை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்தது உறுதியானது.
Images are subject to © copyright to their respective owners.
மேலும் நடந்த விசாரணையில், சதீஷ் மற்றும் சத்யஸ்ரீயும் நண்பர்களாக இருந்து வந்ததாகவும், அப்போது சத்யஸ்ரீயை காதலித்து வந்த சதீஷ் அவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெயரில் இந்த கொலையை செய்ததும் தெரிய வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதற்கு மத்தியில், சத்யஸ்ரீ உயிரிழந்த ஒரு சில தினங்களில் விபரீத முடிவை எடுத்து அவரது தந்தை மாணிக்கம் உயிரிழந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
இதனைத் தொடர்ந்து, சத்யஸ்ரீயின் தாயாரும் தலைமை காவலருமான ராமலட்சுமி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், மற்றொரு அதிர்ச்சி சம்பவமும் அரங்கேறி உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
தீவிர புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த சத்யஸ்ரீயின் தாயார், மகள் சத்யஸ்ரீ மற்றும் கணவர் மாணிக்கம் மறைவால் உயிரிழந்து போய் நிலைகுலைந்து போனதாகவும் தகவல்கள் கூறுகின்றது. அப்படி இருக்கையில், தற்போது உடல்நல குறைவால் ராமலட்சுமி உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Also Read | திருமண நாளில் உயிரிழந்த மணப்பெண்.. பெரும் துயரத்திலும் கனத்த இதயத்துடன் நடத்திய கல்யாணம்..!

மற்ற செய்திகள்
