"எவரும் சொல்லாமலே".. அரசு பள்ளி மாணவியின் அட்டகாசமான குரல்.. பள்ளிக்கல்வித்துறை பகிர்ந்த வீடியோ.. வாழ்த்தும் நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Dec 13, 2022 04:17 PM

அரசுப்பள்ளி மாணவி ஒருவர் 'தென்றல் வந்து தீண்டும் போது' பாடலை பாடும் வீடியோவை தமிழக பள்ளிக்கல்வித்துறை பகிர்ந்திருக்கிறது. மாணவரின் குரல் வளத்தை பார்த்து பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Government School Girl student extraordinary voice in kalai thiruvizha

Also Read | சாலையில் கிடந்த மர்ம பொருள்.. குண்டுன்னு நெனச்சு தெறிச்சு ஓடிய கிராம மக்கள்.. செக் பண்ணிட்டு போலீஸ் சொன்ன விஷயம்..

தமிழக அரசு பள்ளிகளில் 'கலை திருவிழா' நடத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். அதன்படி பள்ளிக்கல்வித் துறையின்கீழ் இயங்கி வரும் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளும் இந்த கலைத் திருவிழாவில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

6 முதல் 8 ஆம் வகுப்பு, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஓவியம், கேலிச்சித்திரம், நவீன ஓவியம், களிமண் சிற்பம், மணல் சிற்பம், புகைப்படம் எடுத்தல், நாட்டுப்புறப்பாட்டு, மெல்லிசை, செவ்வியல் இசை என பல்வேறு கலைத்திறன்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டிகளில் வட்டார அளவில் தேர்வாகும் தனிநபர் மற்றும் குழு மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும். பின்னர், அதிலிருந்து மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க இருக்கும் தனிநபர் மற்றும் குழுக்கள் தேர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி மாதம் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் 'கலையரசன்', 'கலையரசி' என்ற விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றன. மேலும், தமிழக அளவில் தரவரிசையில் முதல் 20 இடங்களை பிடிப்பவர்கள் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அனுப்பிவைக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு பள்ளி மாணவி ஒருவர் 'தென்றல் வந்து தீண்டும் போது' பாடலை உணர்ச்சியுடன் பாடியிருக்கிறார். கலை திருவிழாவின் ஒரு பகுதியாக இந்த மாணவி பாடிய வீடியோவை தமிழக பள்ளிக்கல்வித்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது. மேலும், அந்த பதிவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியையும் டேக் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த வீடியோ நெட்டிசன்கள் பலரின் கவனத்தை ஈர்த்ததுடன் பலரும் மாணவியின் குரல் வளத்தை பாராட்டுவதோடு வருங்காலத்தில் நல்ல நிலையை அடைய வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.

 

Also Read | மனைவியை கொலை செஞ்சதா கணவர் கைது.. 6 வருஷத்துக்கு அப்புறம் இரண்டாவது கணவருடன் சிக்கிய பெண்.. வழக்கில் ஏற்பட்ட திடீர் ட்விஸ்ட்..!

Tags : #GOVERNMENT SCHOOL #STUDENT #GOVERNMENT SCHOOL GIRL STUDENT #KALAI THIRUVIZHA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Government School Girl student extraordinary voice in kalai thiruvizha | Tamil Nadu News.