அதிக இதயத்துடிப்பு பிரச்சனையுடன் வந்த நோயாளி... ‘ரேடியோ அதிர்வெண் அகற்றல்’ மூலம் குணப்படுத்திய காவேரி மருத்துவமனை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Feb 10, 2023 02:37 PM

இதயக்கீழறையில் அதிக இதயத்துடிப்பு (வென்ட்ரிகுலர் டாக்ரிக்கார்டியா) பிரச்சனை இருந்த நோயாளியின் உயிரை காப்பாற்ற இதயத்தில் ரேடியோ அதிர்வெண் அகற்றல் செயல்முறையை மேற்கொண்டுள்ளது சென்னை காவேரி மருத்துவமனை.

Kauvery Hospital Radio Frequency Ablation to a 42 yrs old man

சென்னை, 9 பிப்ரவரி 2023:  இதயக்கீழறையில் அதிக இதயத்துடிப்பு (வென்ட்ரிகுலர் டாக்ரிக்கார்டியா) என்பது இதயதுடிப்பின்மை என்றும் அறியப்படுகிற இதய லயத்தில் (ஹார்ட் துடிப்பு) காணப்படும் ஒரு இயல்பு பிறழ்வு நிலையாகும். இதயத்தின் கீழறைகளின் மின்சார சார்ட் சர்கியுட்களில் (குறுக்கிணைவுகளில்) தோன்றும் இது அதிவேகமாக கடத்தப்படுகிறது. இதய கீழறையில் அதிக இதயத்துடிப்புள்ள (வென்ட்ரிகுலர் டாக்ரிக்கார்டியா) நோயாளிகளுக்கு படபடப்பு, தலைசுற்றல், வலிப்பு தாக்கங்கள் வழக்கமாக ஏற்படுகின்றன; சில நேரங்களில் மாரடைப்பு கூட (கார்டியாக் அரெஸ்ட்) நிகழக்கூடும்

உயிருக்கு மிகவும் ஆபத்தான தீவிர இதய துடிப்பு (ஹார்ட் ரிதம்) பிரச்சனையை கொண்டிருந்த தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் 42 வயதான நோயாளி ஒருவருக்கு இதய மின் உடலியங்கியல் (Cardiac Electrophysiology) இடையீட்டு செயல்முறையை சென்னை காவேரி மருத்துவமனை வெற்றிகரமாக செய்திருக்கிறது. மரபியல் ரீதியாக ஏற்பட்டிருந்த இப்பிரச்சனையை சரி செய்வதற்காக மிகச்சிறிய ஊடுருவல் முறையில் செய்யப்பட்ட இந்த அறுவைசிகிச்சை ஆறு மணிநேரம் நீடித்தது. படபடப்புகள் மற்றும் தலைசுற்றல் பாதிப்புகளோடு காவேரி மருத்துவமனையின் அவசரநிலை பிரிவிற்கு அவர் அழைத்து வரப்பட்டிருந்தார். இதயக்கீழறையில் அதிக  இதயத்துடிப்பு (VT) (வென்ட்ரிகுலர் டாக்ரிக்கார்டியா) பிரச்சனை இருப்பதை இவருக்கு செய்யப்பட்ட ஈசிஜி சோதனை காட்டியது. பலமுறை மின்னதிர்ச்சிகள் மூலம் இயல்பு நிலை கொண்டுவரப்பட்டது.

இதயக்கீழறை அதிக இதயத்துடிப்பு ஏற்படும் நபர்களுக்கு, இதயத்துடிப்பானது ஒரு நிமிடத்திற்கு 200 அல்லது அதற்கும் அதிகமான அளவு வழக்கமாக துடிக்கும். இயல்பு நிலையை விட இது மிகமிக அதிகம். அதிவேகமான இதயத்துடிப்பானது, இரத்தத்தை பம்ப் செய்து பிற உறுப்புகளுக்கு அனுப்புவது மற்றும் இரத்த ஓட்டத்தை பராமரிப்பதை இதயத்திற்கு சிரமமானதாக இது மாற்றிவிடும். இவ்வாறு நிகழுமானால், அந்நபருக்கு சுவாச சிரமம், தலைசுற்றல் ஏற்படும்; நினைவிழப்புகூட ஏற்படக்கூடும். தொடர்ந்து இப்பிரச்சனை நீடிக்குமானால், இதயகீழறையில் குறுநடுக்கம் ஏற்படும் அளவுக்கு இது மோசமாகிவிடும். இதயத்துடிப்பானது அதிவேகமாகவும் மற்றும் தாறுமாறான இதயத்துடிப்பு இருப்பதால் அது திடீரென மாரடைப்பு நோய் ஏற்படுவதற்கு வழிவகுத்துவிடும்.

இந்நோயாளி அழைத்து வரப்பட்டபோது காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த அவசரநிலை சிகிச்சை மருத்துவர்கள், இதய சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மயக்கவியல் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய அவசரநிலை சிகிச்சை குழு மின்னதிர்ச்சிகளின் மூலம் சிகிச்சையளித்தது. இதய மின் உடலியங்கியல் மருத்துவர்கள் உடனடியாக மின் உடலியங்கியல் (EP) ஆய்வுகளை மேற்கொண்டனர்; மேலும் நோயாளியின் இதய துடிப்பை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு ரேடியோ – ஃபிரீகுவன்சி அப்லேஷன் (ரேடியோ அதிர்வெண் அகற்றல் -RFA) என அழைக்கப்படும் ஒரு இதய இடையீட்டு மருத்துவ செயல்முறையை இவருக்கு செய்தனர். எதிர்காலத்தில் துடிப்பின்மை மீண்டும் வராமல் தடுப்பதற்காக ஒரு இன்ட்ரா கார்டியாக் டீஃபைப்ரிலேட்டர் (ICD) என்ற சாதனமும் இந்நோயாளிக்கு பொருத்தப்பட்டது.

இந்நோயாளிக்கு 6 மணிநேரம் நீடித்த இம்மருத்துவ செயல்முறையை செய்திருக்கும் காவேரி மருத்துவமனையின் கார்டியாக் எலெக்ட்ரோ பிசியாலஜிஸ்ட் டாக்டர். தீப் சந்த் ராஜா S, இம்மருத்துவமனை செயல்முறை பற்றி கூறும்போதுய், “இதயத்தின் வலது கீழறையில் மரபியல் ரீதியிலான இதயத்தசை நோய் (ARVD) என்ற பாதிப்பு 42 வயதான இந்நபருக்கு இருந்தது. இத்தகைய பாதிப்பு நிலையில் தசைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு இதயத்தின் மின் கடத்தல் அமைப்பில் குறுக்கிணைவுகள் உருவாகும்.

இதயக்கீழறையில் அதிக இதயத்துடிப்பு என்ற பாதிப்பு திரும்பத்திரும்ப நிகழ்ந்திருந்த போதிலும் நோயாளியால் மருத்துவமனைக்கு வந்து சேரமுடிந்தது அவரது நல்ல அதிர்ஷ்டமே.

எண்டோ-எபிகார்டியல் ரேடியோஃபிரீகுவன்சி அப்லேஷன் (RFA) என அழைக்கப்படும் ஒரு சிக்கலான மருத்துவ செயல்முறையை இவருக்கு நாங்கள் மேற்கொண்டோம். ஹைபிரிட் அறுவைசிகிச்சை அறையில் மேற்கொள்ளப்பட்ட இச்செயல்முறையில் மிகக்குறைந்த ஊடுருவல் அணுகுமுறையைக் கொண்டு இதயத்தின் உட்புற மற்றும் வெளிப்புற பரப்புகள் இரண்டிலும் இருந்து சார்ட் சர்க்யூட்கள் எனப்படும் குறுக்கிணைவுகளை நாங்கள் அகற்றினோம். அத்துடன், 3D நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் கான்டாக்ட் ஃபோர்ஸ் கதீட்டர்கள் போன்ற மிக நவீன மருத்துவ சாதனங்களையும் நாங்கள் பயன்படுத்தினோம். வெற்றிகரமான இச்சிகிச்சைக்குப் பிறகு அதே நாளில் இந்நோயாளிக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாச சாதனம் அகற்றப்பட்டது. 7வது நாளன்று ஒரு டீபைஃபிரிலேட்டர் (ICD) சாதனமும் இந்நோயாளிக்கு பொருத்தப்பட்டது. அதற்குப் பிறகு இதயக்கீழறையில் அதிக இதயத்துடிப்பு (VT) பிரச்சனையிலிருந்தும் இவர் விடுபட்டிருக்கிறார். சிக்கலான இந்த சிகிச்சை செயல்முறை முழுவதிலும் சிறப்பான ஆதரவளித்த மருத்துவர்கள் மற்றும் கேத்லேப் டெக்னிஷியன்கள் குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றி.” என தெரிவித்துள்ளார்.

இதேபோல், கார்டியாக் எம்ஆர்ஐ-யின் வழியாக இந்நோயாளிக்கு இருந்த பிரச்சனையின் தீவிரம் சரியாக அடையாளம் காணப்பட்டது என்று இவருக்கு சிகிச்சையளித்த முதுநிலை இதய சிகிச்சை நிபுணர் டாக்டர். சுந்தர் C கூறினார். இந்நோயாளியின் குடும்ப உறுப்பினர்களின் ஒருவருக்கு அநேகமாக இதே இதய பாதிப்பின் காரணமாக இளவயதிலேயே உயிரிழப்பு ஏற்பட்ட தகவல் அறியப்பட்டதால் இந்நோயாளிக்கு உரிய மரபணு சோதனையும் செய்யப்பட்டது. இதய அறுவைசிகிச்சை நிபுணர்கள் மற்றும் இதய சிகிச்சைக்கான மயக்கவியல் மருத்துவர்களது ஆதரவோடு மட்டுமே இத்தகைய சிக்கலான சிகிச்சை செயல்முறைகள் சாத்தியமாகின்றன என்பதை அவர் வலியுறுத்தி கூறினார். இந்நோயாளிக்கு சிகிச்சை அளித்த இதய மயக்கவியல் மருத்துவர்களது குழு டாக்டர். P. சந்திரசேகர் அவர்களது தலைமையின்கீழ் சிறப்பாக செயலாற்றியிருக்கிறது.

சென்னை காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் & செயலாக்க இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் வெற்றிகரமான இச்சிகிச்சை செயல்முறை குறித்து கூறும்போது, “மரபியல் ரீதியிலான இதயத்தசை வலுவிழப்பு என்பது பிறப்பிலிருந்தே தொடங்குகின்ற ஒரு பாதிப்பு நிலையாகும்; ஆனால் இதன் அறிகுறிகள் இளமை பருவத்தை கடந்ததற்கு பிறகே உருவாகத் தொடங்குகின்றன. நடுத்தர வயதினர் மத்தியில் திடீரென இதய செயலிழப்பு / மாரடைப்பு போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதற்கான முதன்மையான காரணங்களுள் இதுவும் ஒன்றாகும். இதயத்தசை வலுவிழப்பு இருந்த கடந்தகால வரலாறு இந்நோயாளியின் குடும்பத்தில் இருந்திருக்கிறது. இந்நோயாளியின் சகோதரர் 25 வயதில் இதனால் இறந்திருக்கிறார். எனவே இத்தகைய பாதிப்பு அறிகுறிகள் வெளிப்படும்போது, அவற்றை அலட்சியம் செய்யாமல் உடனடியாக இதயவியல் மருத்துவரது ஆலோசனையையும் சரியான இடையீட்டு சிகிச்சையையும் பெறுவது இன்றியமையாதது. அவசர சிகிச்சை துறைக்கு இந்நோயாளி அழைத்துவரப்பட்டபோது மிக மோசமான நிலையில் இருந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இந்நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதில் துடிப்போடும், விவேகத்தோடும் எமது அவசரநிலை சிகிச்சை குழுவினர் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றனர். எமது மருத்துவமனையிலுள்ள சமீபத்திய தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் நவீன உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி நோயறிதலை மிகத்துல்லியமாக செய்து தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் சிகிச்சை அளித்து இவரது உயிரைக் காப்பாற்றிய டாக்டர். சுந்தர் C, டாக்டர். தீப் சந்த் ராஜா S ஆகியோரையும் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த மருத்துவ குழுவினரையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றிகரமான சிகிச்சை செயல்முறைக்குப் பிறகு தனது சொந்த ஊருக்கு திரும்பி சென்றிருக்கும் இந்நோயாளி மீண்டும் செவ்வனே தன் பணிகளை செய்யத் தொடங்கியிருக்கிறார்.

Tags : #KAUVERY HOSPITAL #CHENNAI #RADIO FREQUENCY ABLATION #VENTRICULAR TACHYCARDIA.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kauvery Hospital Radio Frequency Ablation to a 42 yrs old man | Tamil Nadu News.