தளும்ப தளும்ப ரூ.80 ஆயிரத்துக்கு பெட்ரோல் போட்டுட்டு சொகுசுக்காரில் வந்து 1000 ரூபாய் திருடிய கும்பல்.. அதுக்கு அப்றம் போலீஸிடம் சொன்ன விஷயம்தான்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Feb 22, 2023 08:24 PM

உத்திர பிரதேச மாநிலத்திலிருந்து சொகுசு காரில் கொள்ளையடிக்க சென்னைக்கு வந்த கும்பலை சேர்ந்த இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர். அவர்களிடத்தில் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

UP Men theft 1000 rs in chennai arrested by Neelankarai Police

                       Images are subject to © copyright to their respective owners.

Also Read | "எப்புட்றா விக்கெட்டை பறிகொடுக்கலாம்னு கிரவுண்ட்க்கு வராங்க".. - ஹர்பஜன் சிங்..!

சென்னையில் உள்ள நீலாங்கரை பகுதியில் ஏராளமான தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரபலங்களின் வீடுகள் அமைந்திருக்கின்றன. இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் 6 ஆம் தேதி நீலாங்கரையில் உள்ள ஒரு வீட்டிற்குள் இந்த கும்பல் நுழைந்திருக்கிறது. அப்போது உள்ளே இருந்த காவலாளி கூச்சலிட்டதால் அங்கிருந்து தப்பி சென்று இருக்கின்றனர். அதன் பிறகு சுல்தான் என்பவரது வீட்டிற்குள் சென்ற இந்த கும்பல் ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் சில காலனிகளை திருடிச் சென்றுள்ளனர்.

கொள்ளை முயற்சி நடந்தது குறித்து சுல்தான் நீலாங்கரை காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். இதனை அடுத்து சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணையில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். தற்போது கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் உத்திர பிரேதசம் மாநிலத்தில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது என்பதும் அந்த காரின் உரிமையாளர் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

 UP Men theft 1000 rs in chennai arrested by Neelankarai Police

Images are subject to © copyright to their respective owners.

அப்போது, காரின் உரிமையாளரான தனபால் சிங் கொடுத்த தகவலின் படி இந்த கொள்ளை சம்பவத்தில் புனித் குமார், ராஜேஷ்குமார் யாதவ், இர்பான் மற்றும் சுனில் குமார் யாதவ் ஆகியோர் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது. இதனை தொடர்ந்து உத்திர பிரதேசம் சென்று பதுங்கி இருந்த சுனில் குமாரின் சகோதரர் ராஜேஷ் குமார் மற்றும் புனித குமாரை தமிழக காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய இர்பான் மற்றும் சுனில் குமாரை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

 UP Men theft 1000 rs in chennai arrested by Neelankarai Police

Images are subject to © copyright to their respective owners.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் உத்தர பிரதேசத்தில் இருந்து சொகுசு காரில் வரும்போது 80000 ஆயிரம் ரூபாயை பெட்ரோலுக்காக செலவழித்ததாகவும், கொள்ளையடித்து செல்லும் பொருட்களை ஏழை மக்களுக்கு தானமாக வழங்கி வருவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் இர்பான் மற்றும் சுனில் குமார் இருவரையும் பிடிக்கும் பணியில் காவல் துறையினர் இறங்கியுள்ளனர். இந்த சம்பவம் சென்னை முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | கல்யாணமாகி 3-வது நாள்.. புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம்.. திருமண வரவேற்பு விழாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

Tags : #NEELANKARAI #CHENNAI #ARREST #NEELANKARAI POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. UP Men theft 1000 rs in chennai arrested by Neelankarai Police | India News.