'சும்மா மெடிக்கல் செக்கப்க்கு போன மனுஷன்'... 'கொஞ்சம் கூட உங்களுக்கு வலி தெரியலியா'... அதிர்ந்து போன மருத்துவர்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Nov 14, 2020 10:56 AM

ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின்னர் நிச்சயம் வருடத்திற்கு ஒரு முறையாவது உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனக் கூறப்படுவது உண்டு. சில வியாதிகளின் அறிகுறிகள் தெரியாமல் இருக்கலாம், அதை உணர்த்தும் விதத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Dubai doctor removes 1kg tumour from patient\'s kidney

ஐக்கிய அரபு அமீரகமான துபாயில் வசித்து வருபவர் மனோஜ். இவருக்குப் புகை பிடிக்கும் பழக்கம் என்பது அதிகம். அதோடு இருவருக்கு உயர் ரத்த அழுத்த நோயும் உள்ளது. இந்நிலையில் தனது வழக்கமான உடல் பரிசோதனைக்கு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் அவருக்குப் பல பரிசோதனைகளைச் செய்த நிலையில், அதிர்ச்சியான விஷயம் ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். மனோஜின் சிறுநீரகத்தில் கட்டி இருப்பதைப் பார்த்து மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள்.

இதுகுறித்து மருத்துவர்கள் மனோஜிடம் தெரிவித்த நிலையில் அவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார். ஆனால் அது சம்பந்தமாக எந்த வலியையும் தான் உணரவில்லை என மனோஜ் கூறியுள்ளார். ஆனால் அது சாதாரண கட்டியா அல்லது புற்று நோய் கட்டியா என்பது தெரியவில்லை. அதை எடுத்தால் மட்டுமே அவரது உடல் நலத்திற்கு நல்லது என்பதால் அதை அறுவை சிகிச்சை செய்து அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தார்கள்.

Dubai doctor removes 1kg tumour from patient's kidney

ஆனால் திறந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்தால் அது மனோஜ்க்கு ஆபத்தாக முடியலாம் என்பதால் மருத்துவர்கள் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்கள். அதன்படி சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணரும் பிரைம் மருத்துவமனையின் ஆலோசகருமான சஞ்சய் பட் Laparoscopy மூலம் மூன்று மணி  நேரச் சிகிச்சைக்குப் பின்னர் அந்த கட்டியை அகற்றியுள்ளார்.

இந்த சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனோஜ், அடுத்த நாளே தனது உணவுகளை எடுத்துக் கொண்டார். மூன்றாம் நாள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போதைய வாழ்க்கைச் சூழலில் நோய்கள் எந்த வடிவத்தில் வருகிறது என்பதையே யூகிக்க முடியவில்லை. எனவே முடிந்தவரை முறையான உடற்பயிற்சி, முறையான உணவுப் பழக்கத்தோடு உடலைப் பேணி பாதுகாக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dubai doctor removes 1kg tumour from patient's kidney | World News.