'முன்னணி' வீரரைக் கழட்டிவிட்டு... 'இளம்வீரருக்கு' வாய்ப்பளித்த கேப்டன்... 'ஷாக்கான' ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கி இருக்கிறது. ஓபனிங் பேட்ஸ்மேன்களாக பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் இருவரும் விளையாடி வருகின்றனர்.

டெஸ்ட் தொடரில் இருந்து கே.எல்.ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் ரிஷப் பண்ட், விருத்திமான் சஹா இருவரில் விக்கெட் கீப்பராக விளையாட யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆர்வம் கடந்த பல நாட்களாக ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்த நிலையில் தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. சஹா அனுபவம் வாய்ந்தவர் என்றாலும் அதிரடி பேட்ஸ்மேன் இல்லை என்பதால் அவருக்கு பதிலாக பண்டை விக்கெட் கீப்பராக கோலி களமிறக்கி இருக்கிறார்.
இதற்கு பயிற்சி போட்டியில் பண்ட் அடித்த 70 ரன்களும் ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இதைக்கண்ட ரசிகர்கள் கோலியின் அணித்தேர்வு தங்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாக சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். கிடைத்த வாய்ப்பினை பண்ட் தக்க வைத்துக்கொள்கிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இந்திய அணி வீரர்கள் விவரம்:
1. மயங்க் அகர்வால் 2. பிரித்வி ஷா 3. சத்தீஸ்வர் புஜாரா 4. விராட் கோலி(கேப்டன்) 5. அஜிங்கியா ரஹானே 6. ஹனுமான் விஹாரி 7. ரிஷப் பண்ட் 8. ஆர்.அஸ்வின் 9. மொஹம்மது ஷமி 10. இஷாந்த் சர்மா 11. பும்ரா
