ஒரே தெருவைச் சேர்ந்த 54 பேருக்கு கொரோனா!.. சென்னையில் வைரஸ் வேகமெடுத்தது எப்படி?.. பதறவைக்கும் பின்னணி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை ஐஸ் ஹவுசில் தன்னார்வலர் மூலம் 54 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டிப்பிடித்து வருகிறது. தன்னார்வலர்கள் நேரடியாக உதவி செய்ய வேண்டாம், அதன் மூலம் கொரோனா பரவவாய்ப்புள்ளது என்று அரசு கூறியபோது பலர் அதனை அலட்சியப்படுத்தினர்.
இதற்கிடையே, சென்னை ஐஸ் ஹவுசில் காவல் துறையினருக்கும் துப்புரவு பணியாளர்களுக்கு தேனீர் வழங்கிய ஒற்றை தன்னார்வலருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று, அவரிடம் இருந்து பாதுகாப்பு பணியில் ஊர்காவல்படையை சேர்ந்த பெண் ஒருவருக்கும், அயோத்தி குப்பத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கும் பரவியுள்ளது.
மேலும், தன்னார்வலருக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்த ராஜஸ்தானை சேர்ந்த தொழிலாளர்கள் 16 பேர் அந்த பகுதியில் வசிப்போர் என 50க்கும் மேற்பட்டோருக்கு இந்த தொற்று பரவியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் பலருக்கு நோயின் அறிகுறி ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஐஸ் ஹவுஸ் அனுமந்தபுரம் வி.ஆர் பிள்ளை தெருவில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், ஐஸ் ஹவுசில் தன்னார்வலர் ஒருவர் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.