'சென்னையில் ஒரே தெருவில் 40 பேருக்கு கொரோனா...' 'அதுவும் ஒரே குடும்பத்துல மட்டும் 12 பேருக்கு...' 'இங்க மட்டும் ஏன் வேகமா பரவுது...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவல்லிக்கேணியின் ஒரே தெருவை சேர்ந்த 40 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் சென்னை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் நேற்று மட்டும் சுமார் 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், சென்னையில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1000-த்தை கடந்துள்ளது.
மேலும் தற்போது கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துக்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீத பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லாமல் இருப்பது அரசுக்கும், சுகாதார துறைக்கும் சவால் மிகுந்ததாக உள்ளது.
நேற்று சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் 176 பேரில் 20 பேர் ஒரே தெருவை சேர்ந்தவர்கள் என்னும் செய்தி சென்னை மாநகராட்சிக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் அனைவரும் தற்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த தெருவில் மட்டும் அதிகபட்சமாக இதுவரை 40 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதையடுத்து சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி இந்த தெருவில் தொற்று அதிவேகமாக பரவுவதற்கான காரணத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.