'அமெரிக்காவை கிண்டல் செய்து சீனா வெளியிட்ட வீடியோ...' சுதந்திர சிலைக்கே கொரோனாவா? நாங்க மொதல்லயே சொன்னோம்ல, கேட்டீங்களா அமெரிக்கா...?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | May 03, 2020 12:19 PM

கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்க அரசு எவ்வாறு செயல்பட்டது என அனிமேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது சீன அரசு.

Animation video released by China teasing the US

தற்போது உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும், கொரோனா வைரஸ் முதலில் சீனாவின் உஹான் மாகாணத்திலிருந்து மனிதர்களுக்கு பரவ தொடங்கி தற்போது நாடு முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பரவிய நாள் முதற்கொண்டு அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் வார்த்தைகளால் ஒரு பனி போரே நடக்கிறது என சொல்லலாம். அமெரிக்காவில் ஏற்படும் பலி எண்ணிக்கையே கொரோனா பரவிய விதத்தை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

இந்நிலையில் சீனாவில், அமெரிக்கா கொரோனா வைரஸ் விவகாரத்தில் எவ்வாறு செயல்பட்டு என்பதை பற்றி பகடி செய்யும் விதமாக ஒரு அனிமேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் ஒரு பக்கத்தில் சீனாவின் பக்கம் கரோனா போராளிகள், மருத்துவப் பணியாளர்களைக் குறிக்கும் முகக்கவசங்கள் அணிந்த ஒரு பொம்மையும், மறுபக்கத்தில் அமெரிக்காவின் சுதந்திர சிலையும் பேசிக்கொள்வது போல சித்தரிக்கப்பட்டுள்ளது.

முதலில் சீன பொம்மை டிசம்பர் மாதம், 'நாங்கள் ஒரு வைரஸ் கண்டுபிடித்துள்ளோம்'  என்று சொல்கிறது. அதற்கு அமெரிக்கச் சுதந்திர சிலை, 'அதனால் என்ன? இது வெறும் ஃப்ளூதான்' என்று கூறுகிறது. பிறகு சீனாவை சேர்ந்த பொம்மை, இந்த வைரசால் நிறைய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களும் பாதிக்கப்படுவதாகவும், நாங்கள் புதிய மருத்துவ மனைகளை கட்டிவருவதாகவும் சொல்கிறது.

அதற்கு அமெரிக்க சுதந்திர சிலை சீனாவை குற்றம் சொல்லும் விதமாக, மாஸ்க் போட வேண்டாம், லாக் டவுன் தேவை இல்லாதது, நீங்கள் பொய் சொல்கிறீர்கள் , அமெரிக்கா சொல்வது தான் சரி எனவும் மாறி மாறி கூறி கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் சுதந்திர சிலைக்கே கொரோனா தாக்கியதை போலவும் சித்தரித்துள்ளனர்.

இந்த அனிமேஷன் வீடியோவானது தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.