'அபார்ட்மெண்ட்டில் ஸ்கிரீனிங்!'.. 'பால்கனியில் ஆடியன்ஸ்!'.. ஊரடங்கில் புதுமையான பொழுதுபோக்கு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுச்சேரியில் பால்கனியில் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வரும் புதுமையான பொழுதுபோக்கு வைரலாகி வருகிறது.
கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் அடங்கிக் கிடக்கும் நிலையில், புதுச்சேரியில் சுதந்திர பொன்விழா நகரில் வீட்டில் உள்ள புரொஜெக்டர்கள் மூலம் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் டிரைவ் இன் திரையரங்கு போல், சுவற்றில் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றது.
250 குடும்பங்களுக்கு மேல் வசிக்கிற இந்த பகுதியில் குடியிருப்பு வாசிகள் மாலை நேரமானால் நடைப்பயிற்சிக்காக சாலைக்கு வருவதை தடுத்து அவர்களை குடியிருப்பிலேயே இருக்க வைப்பதற்க, குடியிருப்பு சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் கங்காசேகரன் என்பவர் தினமும் அகண்ட திரையில் படங்களை திரையிட்டு வருகிறார்.
மேல் தளத்தில் வசித்து வரும் கங்காசேகரன், தனது வீட்டின் எதிர்ப்புறம் உள்ள வீட்டு சுவற்றைத்தான் இவ்வாறு அகண்ட திரையாக்கி, புரொஜொக்டர் மூலம் படத்தை திரையிடுவதால், குடியிருப்புவாசிகள் வீட்டில் இருந்து பொழுதுபோக்கிற்காக வெளியே வராமல், வீட்டு பால்கனியில் இருந்தபடியே அனைவரும் திரைப்படத்தை காண்கின்றனர்.