கோலி CENTURY அடிப்பதற்கு முன் அஸ்வின் போட்ட ட்வீட்.. அடுத்த ஒரு மணி நேரத்தில் நடந்த சூப்பர் சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Jan 10, 2023 07:26 PM

இந்தியாவுக்கு இலங்கை கிரிக்கெட் அணி தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், முதலாவதாக டி 20 தொடர் நடந்து முடிந்தது.

Ravichandran ashwin tweets about virat kohli 73 th century

Also Read | "சின்ன வயசுல என் பேட்டிங் நீங்க பாத்ததில்ல போல".. சூர்யகுமாரிடம் ஜாலியாக பேசிய டிராவிட்.. "மனுஷன் Fun பண்றாரே 😂"

3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற, மூன்றாவது போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் நிலை உருவாகி இருந்தது.

அப்படி ஒரு சூழலில் நடந்த கடைசி டி 20 போட்டியில் இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ், பந்துகளை நாலாபுறமும் அடித்து நொறுக்கி சதமடித்த அவர், மிகவும் கடினமாக பறந்தும், படுத்தும் என ஷாட்களை அடித்து மைதானத்தில் இருந்த அனைவரையும் அசர வைத்திருந்தார். இந்த போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி இருந்தது.

Ravichandran ashwin tweets about virat kohli 73 th century

இதற்கு அடுத்தபடியாக, தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் தொடரும் ஆரம்பமாகி உள்ளது. இதன் முதல் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 373 ரன்கள் குவித்துள்ளது.

இந்திய அணி ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடி ரன் எடுத்ததால், சிறப்பான ஸ்கோரை எட்டவும் வழி செய்திருந்தது. அதிலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, 87 பந்துகளில் 12 ஃபோர்கள் மற்றும் ஒரு சிக்சருடன் 113 ரன்கள் எடுத்து பட்டையை கிளப்பி இருந்தார். கடந்த ஆண்டின் இறுதி ஒரு நாள் போட்டியை சதத்துடன் முடித்திருந்த கோலி, 2023 ஆம் ஆண்டை ஒரு நாள் சதம் கொண்டு தொடங்கி உள்ளார்.

Ravichandran ashwin tweets about virat kohli 73 th century

கடந்த ஆண்டின் முதல் பாதி வரை நிறைய விமர்சனங்களை சந்தித்து வந்த விராட் கோலி, ஆசிய கோப்பை மற்றும் டி 20 உலக கோப்பை உள்ளிட்ட பல தொடர்களில் தொடர்ந்து சிறப்பாக ரன் குவித்து தான் கிங் கோலி என்பதையும் நிரூபித்திருந்தார். தற்போதும் சதமடித்து ஒரு நாள் தொடரை கோலி ஆரம்பித்துள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், கோலி சதமடிப்பதற்கு சுமார் ஒரு மணி நேரம் முன்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் செய்த ட்வீட் ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. ரோஹித் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்த நிலையில் அதன் பின்னர் ஆட வந்த விராட் கோலியும் அசத்தலாக ஆடி ரன் சேர்த்து கொண்டிருந்தார்.

Ravichandran ashwin tweets about virat kohli 73 th century

அந்த சமயத்தில் ட்வீட் செய்திருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், "எத்தனை பேர் இந்திய அணி 400 + ரன்களை குவிக்கும் என நினைக்கிறீர்கள்?" என கணித்து விராட் கோலி 73 ஆவது சதத்தை அடிப்பது பற்றியும் குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார். அவர் அப்படி ட்வீட் செய்த சுமார் ஒரு மணி நேரம் கழித்து விராட் கோலி தனது 73 ஆவது சதமடித்து அசத்தி இருந்தார். இந்திய அணி 400 ரன்களை தொடவில்லை என்றாலும் 373 ரன்கள் வரை அடித்திருந்த நிலையில் கோலி சதமடித்தது குறித்து அஸ்வின் செய்திருந்த ட்வீட் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Also Read | 10 வயசுல எழுதி கடலில் போட்ட கடிதம்.. 37 வருஷம் கழிச்சு கைக்கு வந்த வினோத சம்பவம்!!

Tags : #CRICKET #RAVICHANDRAN ASHWIN #RAVICHANDRAN ASHWIN TWEETS #VIRAT KOHLI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ravichandran ashwin tweets about virat kohli 73 th century | Sports News.